டோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டு ஒத்திவைப்பு.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டு ஒத்திவைப்பு.... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • Share this:
கொரோனா அச்சம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் ஓராண்டு ஒத்திவைக்ப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் 2020 போட்டிகள் வரும் ஜூலை 24-ம் தேதி ஜப்பான் தலைநகரம் டோக்கியாவில் நடைபெற உள்ளது. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளை தள்ளிவைக்க வேண்டுமென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் கோரிக்கைள் வைத்தனர்.

கனடாவும், ஆஸ்திரேலியாவும் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் ஒலிம்பிக் சங்கமும் தீவிர ஆலோசனை நடத்தினர். போட்டிகள் நடத்துவது, வீரர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தி தருவது, உலகமெங்கும் போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கலமா உள்ளிட்டவை குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.


இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்படுமென்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் டிக் பௌண்ட் யு.எஸ்.ஏ டூடே செய்திக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதுத்தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவராத நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் ஒத்திவைக்கப்படுவதாக ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பாச் ஜப்பான் பிரதமரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் அபே, டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்படவில்லை. அடுத்த வருடம் ஒத்திவைக்ப்படுவதாக தெரிவித்துள்ளார்.
First published: March 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்