முகப்பு /செய்தி /விளையாட்டு / Tokyo Olympics | மகளிர் கூடைப்பந்து, கைப் பந்து போட்டிகளில் தங்கம் - இறுதி நாளில் அசத்திய அமெரிக்கா

Tokyo Olympics | மகளிர் கூடைப்பந்து, கைப் பந்து போட்டிகளில் தங்கம் - இறுதி நாளில் அசத்திய அமெரிக்கா

டோக்கியோ ஒலிம்பிக்

டோக்கியோ ஒலிம்பிக்

டோக்யோ ஒலிம்பிக்கின் கடைசி நாள் போட்டிகளில் தங்க வேட்டையில் ஈடுபட்டதால், அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது.

  • Last Updated :

மகளிருக்கான கைப்பந்து இறுதிப் போட்டியில் அமெரிக்கா - பிரேசில் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணி வீராங்கனைகளும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இருப்பினும், சற்று நேர்த்தியாக ஆடிய அமெரிக்கா 3-0 என்ற நேர்செட்களில் வெற்றிபெற்றது.

இதன் மூலம் ஒலிம்பிக் மகளிர் கைப்பந்துப் போட்டியில் அமெரிக்கா முதல் முறை தங்கம் வென்றது. அத்துடன், 2008, 2012 ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பிரேசிலிடம் அடைந்த தோல்விக்கு அமெரிக்க பதிலடி கொடுத்தது.

முன்னதாக, நடைபெற்ற மூன்றாவது இடத்துக்கான போட்டியில் தென்கொரியாவை நேர்செட்களில் வீழ்த்தி, செர்பியா வெண்கலப் பதக்கம் வென்றது.

மகளிருக்கான கூடைப்பந்து இறுதிப் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டது அமெரிக்கா. இதில், ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா 90-75 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று, ஒலிம்பிக்கில் தொடர்ந்து 7-வது முறை தங்கத்தை முத்தமிட்டது.

ஆடவருக்கான 63 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் கிஷாவ்ன் டேவிஸ் (Keyshawn Davis) உடன், கியூபா வீரர் ஆண்டி குரூஸ் மோதினார். இதில், ஆக்ரோஷமாக ஆடிய ஆண்டிகுரூஸ் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று தங்கத்தை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் டோக்யோ ஒலிம்பிக் குத்துச்சண்டை பிரிவில் மட்டும் கியூபா 4 தங்கம் உட்பட 5 பதக்கங்களை வென்று முதலிடம் பிடித்தது.

மகளிருக்கான 75 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை இறுதிச் சுற்றில் பிரிட்டனின் லான் பிரைஸ் (Lauren Price), சீனாவின் லி குயான் உடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த சுற்றில் ஆதிக்கம் செலுத்திய பிரைஸ் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றிபெற்று தங்கத்தை, தனது கழுந்தில் ஏந்தினார்.

லான் பிரைஸ் தங்கம் வென்றதன் மூலம் தான், பதக்கப்பட்டியலில் பிரிட்டன் 4-வது இடத்திற்கு முன்னேற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இசைக்கேற்றபடி நடனமாடிக் கொண்டே சாகசங்கள் செய்யும் ஜிம்னாஸ்டிக்கில் தங்கம் பதக்கத்திற்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்கேரிய வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு தங்கத்தை தட்டிச் சென்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    வழக்கமாக இந்தப் போட்டியில் ரஷ்ய அணிதான் ஆதிக்கம் செலுத்தும். 2000-ம் ஆண்டு தொடங்கி 2016 ஒலிம்பிக் வரை இப்பிரிவில் தொடர்ந்து 5 முறை இவர்கள் தங்கம் வென்றிருந்தனர். இந்நிலையில் ரஷ்ய அணியின் தொடர் வெற்றிக்கு பல்கேரிய வீராங்கனைகள் முற்றுப்புள்ளி வைத்தனர்.  ஒட்டுமொத்தமாக அமெரிக்கா, 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என மொத்தமாக 113 பதக்கங்களுடன் முதல் இடத்தைப் பிடித்தது.

    First published:

    Tags: Olympic 2020