ஒலிம்பிக் 2020 : பழைய செல்போன்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பதக்கங்கள் வெளியீடு!

  • News18
  • Last Updated :
  • Share this:
ஜப்பானின், டோக்கியோ நகரில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட உள்ள பதக்கங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

டோக்கியாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் வழங்கப்பட உள்ள பதக்கங்கள் பழைய செல்போன்களை மறுசுழற்சி செய்யப்பட்டு தயாரிக்கப்பட்டவை.

இதற்கான திட்டம் 2017ம் ஆண்டே வரையறுக்கப்பட்டு வணிகர்கள், பொதுமக்களிடமிருந்து பயன்படாத பழைய செல்போன்களை பெற்றுள்ளனர். சுற்றுச்சுழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் மறுசுழற்சி செய்து  பதக்கங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கிரீக் புராணங்களில் வெற்றியின் கடவுளாக கருதப்படும், "நைக்" கடவுள் ஒரு புறமும், மறுபுறம் ஒலிம்பிக் வளையங்களுடன், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் லோகோவும் பொறிக்கப்பட்டுள்ளது.

தங்க பதக்கம் 556 கிராம் எடையுடன் , வெள்ளி பதக்கம் 550 கிராம் எடையுடன், வெண்கல பதக்கம் 450 கிராம் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

Also Watch

Published by:Vijay R
First published: