• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டோக்கியோ பாராஒலிம்பிக் நாளை ஆரம்பம்... தமிழக வீரர் மாரியப்பன் துவக்க விழாவில் பங்கேற்பு

டோக்கியோ பாராஒலிம்பிக் நாளை ஆரம்பம்... தமிழக வீரர் மாரியப்பன் துவக்க விழாவில் பங்கேற்பு

மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு

பாராஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    டோக்கியோ பாராஒலிம்பிக் துவக்க விழா நாளை நடைபெற உள்ளது. இதில் மாரியப்பன் உட்பட 5 வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

    மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஏறக்குறைய 160 நாடுகளைச் சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு நிறைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளின் சார்பில் 6 அதிகாரிகள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வீரர், வீராங்கனைகளின் எண்ணிக்கையில் வரம்பு கிடையாது.

    Also Read : அதீத பலத்துக்கு கைக்கொடுத்த உடலுறவு... ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை பகிர்ந்த வெற்றி ரகசியம்

    இந்தியா சார்பில் அதிகபட்ச எண்ணிக்கையாக இந்த முறை 54 வீரர், வீராங்கனைகள் தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் உள்பட 9 வகையான விளையாட்டுகளில் களம் இறங்குகிறார்கள். தமிழகத்தை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தலைமையில் இந்திய அணி தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: