முகப்பு /செய்தி /விளையாட்டு / FIFA உலகக் கோப்பை கால்பந்து... எந்தெந்த அணிகள் இன்று மோதுகின்றன?

FIFA உலகக் கோப்பை கால்பந்து... எந்தெந்த அணிகள் இன்று மோதுகின்றன?

பிபா

பிபா

கத்தாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் சுற்று லீக் போட்டிகள் முடிந்து 2வது சுற்று ஆட்டங்கள் களைகட்டவுள்ளது

  • Last Updated :
  • inter, IndiaQatarQatar

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்றும் நான்கு லீக் போட்டிகள் களைகட்ட காத்திருக்கிறது. யார் யாருடன் மோதுகின்றன?

கத்தாரில் களைகட்டி வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் முதல் சுற்று லீக் போட்டிகள் முடிந்து 2வது சுற்று ஆட்டங்கள் களைகட்டவுள்ளது.

வேல்ஸ் vs ஈரான்

பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் வேல்ஸ் மற்றும் ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. வேல்ஸ் அணி முதல் போட்டியில் டிராவையும், ஈரான் அணி முதல் போட்டியில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

கத்தார் vs செனகல்

மாலை 6.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் மற்றும் செனகல் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே வால்வா சாவா போட்டியாக அமைந்துள்ளது.

நெதர்லாந்து vs ஈகுவடார்

இரவு 9.30 மணிக்கு நடைபெறும் மூன்றாவது போட்டியில் குரூப் ஏ-ல் உள்ள நெதர்லாந்து மற்றும் ஈகுவடார் அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றியை ருசித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்று நிச்சயம் என்பதால் ஆட்டத்தில் அனல் பறக்கும்.

FIFA 2022 : வெற்றியுடன் உலகக்கோப்பை தொடங்கிய போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனை 

இங்கிலாந்து vs அமெரிக்கா

top videos

    நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து கோல் மழை பொழிந்து அபார வெற்றி பெற்றுள்ளது, அமெரிக்கா தோல்வியை சந்துள்ளது. இந்த யுத்தத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்று உறுதியாகும்.

    First published:

    Tags: FIFA World Cup 2022, Qatar