அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை கோவை, சேலம், திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில்  நடைபெறுவதாக இருந்தது.

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு
TNPL
  • Share this:
கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் ஜூன் 10 ம் தேதி தொடங்குவதாக இருந்த ஐந்தாவது சீசன் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

கொரோனோ வைரஸ் தாக்கத்தால் விளையாட்டு உலகமே முடங்கிக்கிடக்கிறது. ஒலிம்பிக் முதல் உள்ளூர் விளையாட்டுகள் வரை அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது சீசன் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை கோவை, சேலம், திண்டுக்கல், நெல்லை ஆகிய இடங்களில்  நடைபெறுவதாக இருந்தது. கொரோனோ வைரஸ் பரவல் தமிழகத்தில் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் போட்டிகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அறிவித்துள்ளது.

Also see:


First published: May 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading