சென்னை திரும்பிய தங்க மங்கை இளவேனில் வாலறிவன்! வரவேற்க செல்லாத அதிகாரிகள்

அவரது தந்தை மற்றும் தாயார் குஜராத்தில் இருப்பதால் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டும் விமான நிலையம் வந்து வரவேற்றனர்.

news18
Updated: September 3, 2019, 4:56 PM IST
சென்னை திரும்பிய தங்க மங்கை இளவேனில் வாலறிவன்! வரவேற்க செல்லாத அதிகாரிகள்
இளவேனில் வாலறிவன்
news18
Updated: September 3, 2019, 4:56 PM IST
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய இளவேனில் வாலறிவன் வரவேற்க அரசு சார்பாக அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. இந்தச் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில் சென்னை விமான நிலையம் வந்தடைந்த இளவேனில் வாலறிவனை வரவேற்க தமிழக அரசு சார்பாகவோ, ரைபிள் கிளப் சார்பாகவோ யாரும் செல்லவில்லை.

இளவேனில் வாலறிவான்இந்தச் சம்பவம் பல்வேறு தரப்பினருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தந்தை மற்றும் தாயார் குஜராத்தில் இருப்பதால் அவருடைய நெருங்கிய உறவினர்கள் மட்டும் விமான நிலையம் வந்து வரவேற்றனர்.

சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இளவேனில் வாலறிவன், ‘தங்கப்பதக்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் இதற்கு பிறகு இளம் வீரர்கள் உருவாக வாய்ப்புள்ளது. முதல்வர் வெளிநாட்டு பயணத்தில் இருப்பதன் காரணமாக அவர் சென்னை திரும்பியதும் அவரை நேரில் சந்திப்பதற்காக முயற்சித்து வருகிறேன்’ என்று தெரிவித்தார்.

Also see:

Loading...

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...