உயிரை மாய்த்துக்கொண்ட இளம் கிரிக்கெட் வீராங்கனை

திரிபுராவைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உயிரை மாய்த்துக்கொண்ட இளம் கிரிக்கெட் வீராங்கனை
மாதிரிப் படம்
  • Share this:
திரிபுரா மாநிலம் தாய்நானி கிராமத்தைச் சேர்ந்தவர் அயந்தி ரியங். அவருக்கு வயது 16. அவருக்கு நான்கு சகோதர, சகோதரிகள் இருக்கின்றனர். ரியாங் பழங்குடி இனத்தைச் சேர்ந்த அவர், திரிபுராவின் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஆவார். அவர், 23- வயதுக்குட்பட்டோருக்கான டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தநிலையில், அயந்தி ரியங், ‘வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசிய திரிபுரா கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் திமிர் சந்தா, ‘வருங்கால திறமையான வீரரை இந்த மாநிலம் இழந்துள்ளது. அவர் இறந்த செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. கடைசி அமர்வில் அவரைப் பார்த்த வரைக்கும் நன்றாகத் தான் இருந்தார்.ஊரட்ங்கின் காரணமாக பயிற்சிகள் ஏதும் இல்லை. நாங்கள் சில ஆன்லைன் வகுப்புகள் நடத்தினோம். அவருடைய குடும்பப் பிரச்னை குறித்து எங்களுக்குத் தெரியாது’ என்று விளக்கமளித்துள்ளார்.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவிமையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: June 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading