எடக்குமடக்காக கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்சன் ஆன கோலி..!

விராட் கோலி.

 • News18
 • Last Updated :
 • Share this:
  கடந்த 15 வருடங்களில் இருந்ததிலேயே இதுதான்  சிறந்த அணி என்ற ரவி சாஸ்திரியின் கருத்து சரிதான் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

  இங்கிலாந்துக்கு எதிரான 5-போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-4 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியுற்றது. 5-வது போட்டியில் தோல்வியடைந்த பிறகு கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.

  அப்போது கூட்டத்தில் இருந்த செய்தியாளர், “கடந்த 15 வருடங்களில் இப்போது இருக்கும் இந்திய அணிதான் சிறந்த அணி என்று தெரிவித்தாரே. அது உண்மையென்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.


  விராட் கோலி (கோப்புப்படம்)

  இந்த கேள்வியை எதிர்பார்க்காத கோலி, சட்டென்று கோபடமைந்து பின்பு நிதானத்து, “ஆம் நாங்கள் சிறந்த அணிதான் என்று நம்புகிறோம். ஏன்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என்று சீறினார்.

  அதற்கு, “எனக்கு அப்படி தோன்றவில்லை” என்று அந்த செய்தியாளர் பதிலளித்தார். “அது உங்கள் கருத்து. நன்றி!”என்று கோலி முடித்துக்கொண்டார்.

  5-வது டெஸ்ட் போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “கடந்த 15 வருடங்களில் இப்போது உள்ள அணிதான் சிறந்த அணி” என்று தெரிவித்தார். ரவி சாஸ்திரியின் இந்த கருத்துக்கு கங்குலி ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Saravana Siddharth
  First published: