Home /News /sports /

திருமணத்தின்போது கால்பந்து விளையாடச் சென்ற கணவர்: காத்திருந்த மனைவி!

திருமணத்தின்போது கால்பந்து விளையாடச் சென்ற கணவர்: காத்திருந்த மனைவி!

கால்பந்து வீரர் ரித்வான் திருமணம்.

கால்பந்து வீரர் ரித்வான் திருமணம்.

This Kerala Youth Left His Wedding Ceremony Mid-way to Play Football Match | மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், ரித்வானை சந்திக்க விரும்புவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
    கேரள மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கால்பந்தாட்டத்தின் மீது இருந்த தீவிர மோகத்தால் தனது திருமணத்தின்போது  போட்டியில் விளையாடச் சென்ற நிகழ்வு வைரலாகி வருகிறது.

    கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் ரித்வான். இவர் சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டின் மீது தீவிரமாக இருந்துள்ளார். மலப்புரத்தில் ‘பிஃபா மஞ்சேரி’ என்ற கால்பந்தாட்ட அணியில் விளையாடி வருகிறார்.

    மலப்புரத்தில் நடைபெற்று வரும் ஏழு வீரர்கள் மட்டும் விளையாடக்கூடிய 7எஸ் லீக் கால்பந்தாட்ட போட்டியில் அவரது அணியும் விளையாடி வருகிறது. இதற்கிடையே, ரித்வானுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த அதே நாளில் அவரது அணி முக்கியமான சுற்றில் விளையாட வேண்டியிருந்தது.

    Kerala Football Ground, கேரளா கால்பந்து மைதானம்
    கேரளா: 7ஸ் கால்பந்து லீக்.


    கால்பந்தின் மீது தீராத காதல் கொண்ட ரித்வானால் திருமணத்தையும் தள்ளிப்போட முடியவில்லை. இறுதியில் திருமண நாளன்று முக்கியமான சடங்குகளை முடித்த ரித்வான், கால்பந்து போட்டியில் விளையாடவதற்காக தனது மனைவியிடம் அனுமதி கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவியும் பச்சைக்கொடி, திருமண மண்டபத்தில் இருந்து மைதானத்துக்கு புறப்பட்டு விட்டார்.

    அதிஷ்ட வசமாக அவரது அணியும் அந்த போட்டியில் வெற்றி பெற்றது. அதன்பின், வீட்டிற்குத் திரும்பிய ரித்வான், மற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டார். இந்த நிகழ்வு குறித்து தகவல் அறிந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், ரித்வானை சந்திக்க விரும்புவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



    இந்த சம்பவம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தமிழகத்தில் 100 ஸ்மார்ட் மைதானங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Football, Rajyavardhan singh rathore

    அடுத்த செய்தி