Home /News /sports /

இதுவரை நடந்தவற்றில் இதுதான் சிறந்த செஸ் ஒலிம்பியாட் என அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர் - விஸ்வநாதன் ஆனந்த்

இதுவரை நடந்தவற்றில் இதுதான் சிறந்த செஸ் ஒலிம்பியாட் என அனைவரும் ஒப்புக்கொள்கின்றனர் - விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த்.

விஸ்வநாதன் ஆனந்த்.

“செஸ் போட்டி நடத்துவதில் அரசின் பங்களிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியைக் காண்பதற்கு அனைத்து நாடுகளிலிருந்தும் மக்கள் வந்தது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.” - விஸ்வநாதன் ஆனந்த்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    செஸ் ஒலிம்பியாட் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலேயே இதுதான் சிறந்தது என இந்திய கிராண்ட் மாஸ்டரும் சர்வதேச கூட்டமைப்பு துணைத்தலைவருமான விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவர் ஆர்காடி வோர்க்கோவிச் மற்றும் துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சென்னை மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் இடத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்,

    அப்போது முதலில் பேசிய சர்வதேச கூட்டமைப்பு தலைவர் ஆர்காடி வோர்க்கோவிச்,
    "சர்வதேச செஸ் கூட்டமைப்பு தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. நான்கு மாதத்தில் அனைத்து பணிகளையும் செய்து கொடுத்த தமிழக அரசுக்கும் இந்திய அரசுக்கும் எனது நன்றி.

    பெண்களுக்கான செஸ் என்பதில் அதிக கவனம் செலுத்த இருக்கிறேன். மேலும் செஸ் கூட்டமைப்பின் நிதியை அதிகரிக்க அனைத்து நாடுகளிலிருந்தும் ஸ்பான்சர்ஷிப் கிடைக்க நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்.

    செய்தியாளர்கள் சந்திப்பில் விஸ்வநாதன் ஆனந்த்.


    அதுமட்டுமில்லாமல் ‘மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ்’, ‘ஆதரவற்றவர்களுக்கான செஸ்’ என பல்வேறு திட்டங்களைக் கொண்டு வர முடிவு செய்து இருக்கிறேன்.

    இந்த முறையே மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டி நடத்தத் திட்டமிட்டிருந்தேன். அதிக நேரம் கிடைக்காததால் அதை நடத்த முடியவில்லை அடுத்த ஒலிம்பியாட் போட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கு என செஸ் போட்டி நடைபெறும். 45 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டில் நடைபெறும் " எனத் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய சர்வதேச கூட்டமைப்பு துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த்,

    "44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வரும் இந்த நேரத்தில் சர்வதேச கூட்டமைப்புக்கான தேர்தலும் நேற்று நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பிடே துணைத் தலைவர் பதவியை ஒரு பொறுப்பாக வைத்துச் செயல்படுவேன். தமிழகத்தில் என்னென்ன சர்வதேச போட்டிகளை நடத்த முடியும் என்பது குறித்து தமிழக அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம்.

    நாம் ஏற்கனவே செஸ்ஸில் முன்னணியில் இருக்கிறோம், இப்போது சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும் மாறி இருக்கிறோம். செஸ் போட்டி நடத்துவதில் அரசின் பங்களிப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது . அதுமட்டுமல்லாமல் இந்த போட்டியைக் காண்பதற்கு அனைத்து நாடுகளிலிருந்தும் மக்கள் வந்தது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஒரு செஸ் போட்டியைக் காண்பதற்கு இவ்வளவு மக்கள் கூட்டத்தை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை இது தற்போது சென்னையில் நடப்பதால் மேலும் பெருமை கொள்கிறேன். இந்திய அணியும் சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலே இதுதான் சிறந்தது என்று அனைவரும் ஒப்புக்கொண்டார்கள்.

    ஏற்கனவே பார்வையற்ற கூட்டமைப்புடன் பேசி இருக்கிறேன். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த எங்களுக்குக் குறைந்த காலம் கொடுக்கப்பட்டமையால் மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப் பிரிவு ஒதுக்கி போட்டி நடத்த இயலவில்லை. ஆனால் வரும் காலத்தில் இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

    செஸ் விளையாட்டில் இந்தியாவிற்கு என்னென்ன செய்ய முடியும் என்பதை ஆலோசித்துச் செய்யக் காத்திருக்கிறேன். இளைஞர்கள் நன்றாக செஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் தற்போது செஸ் போட்டிக்கு நல்ல நேரம்" எனத் தெரிவித்தார்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Chess, Chess Olympiad 2022

    அடுத்த செய்தி