தனது மனைவிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரோஹித் சர்மா - வைரல் புகைப்படம்!
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எப்போதும் உன்னை காதலிக்கிறேன் @ritssajdeh" என்று தனது மனைவிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறிnaar ரோஹித் சர்மா |

தனது மனைவிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரோஹித் சர்மா
- News18 Tamil
- Last Updated: December 22, 2020, 2:30 PM IST
இந்திய அணயின் முக்கிய வீரராக திகழ்ந்து வருபவர் ரோகித் சர்மா. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 அரைசதங்களை பூர்த்தி செய்து சாதனை புரிந்துள்ள அவர், ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தலைமையேற்று 5 முறை கோப்பையை வென்றவர். கடந்த 2019 உலக கோப்பை தொடரில் 5 சதங்களை அடித்து, அந்த தொடரின் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றவர்.
இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஹீரோ ரோஹித் சர்மா, அடிக்கடி தனது மனைவி மற்றும் மகளுடன் எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித், தனது மனைவி ரித்திகா சஜ்தேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
பெரும்பாலான புகைப்படங்களில், இவர்கள் இருவரின் முகத்தில் பிரகாசமான புன்னகை மின்னுவதைக் காணலாம். புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், எப்போதும் உன்னை காதலிக்கிறேன்" என்று போஸ்ட் செய்தார். ரோஹித் மற்றும் ரித்திகாவுக்கு 2015ம் ஆண்டு திருமணமானது. அவர்களுக்கு இப்போது ஒரு மகள் இருக்கிறாள்.
அதற்கு பதிலளித்த ரித்திகா, “ஆவ் லவ் யூ” (“Aaww Love You.”) என்றார். இந்த இடுகைக்கு பதிலளித்த மூத்த கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஹார்ட் ஈமோஜியுடன் “ஹேப்பி பேடே மார்லோ” (“Happy bday Marlow,) என்று தனது வாழ்த்துக்களை கூறினார். நடந்துகொண்டிருக்கும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ரோஹித் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளார்.
இந்திய கேப்டன் விராட் கோலி இல்லாத நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரோஹித்தின் பிறந்தநாளன்று, அவரது மனைவி, தனக்கு மூச்சுமுட்டும் அளவிற்கு தன்னை சிரிக்க செய்பவர் ரோகித் சர்மா என்று போஸ்ட் செய்தார். மேலும் தன்னுடைய பயணங்களின் உற்ற தோழனாய், நண்பனாய், சிறந்த தந்தையாய், விளங்குபவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் லவ் யூ ரோ என்றும் அவர் கூறியுள்ளார்.இந்திய கேப்டன் விராட்டுக்கு 2021 ஜனவரியில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

View this post on Instagram