முகப்பு /செய்தி /விளையாட்டு / 44வது செஸ் ஒலிம்பியாட்டின் டார்லிங் ராண்டா செடர்!

44வது செஸ் ஒலிம்பியாட்டின் டார்லிங் ராண்டா செடர்!

ராண்டா செடர்.

ராண்டா செடர்.

போர் மூண்ட பாலஸ்தீனத்திலிருந்து சென்னை வந்துள்ள 8 வயது செஸ் வீராங்கனை!

  • 1-MIN READ
  • Last Updated :
  • Mamallapuram (Mahabalipuram), India

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட்டின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறார் பாலஸ்தீன நாட்டின் பெண்கள் அணியைச் சேர்ந்த 8 வயது ராண்டா செடர்.

செஸ் ஒலிம்பியாட்டின் மிக இளவயது பங்கேற்பாளரான இவர் 4 சுற்றுகளில் ஒரு சுற்றில் 20 வயதுடைய வீராங்கனையை வீழ்த்தியுள்ளார்.

மேலும் ஒரு போட்டியை டிரா செய்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் போட்டிகளைப் பார்வையிடச் சென்றிருந்தபோது ராண்டாவை சந்தித்து நலம் விசாரித்தார். ராண்டா 5 வயதாக இருக்கும்போதே அவரது தந்தை இவருக்கு செஸ் விளையாடப் பயிற்றுவித்துள்ளார். அப்போதிலிருந்து விளையாடத்தொடங்கிய இவர் பாலஸ்தீன பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடம் வென்றுள்ளார்

அதன் மூலமாக அவருக்கு 44வது செஸ் ஒலிம்பியாட்டில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chess, Chess Olympiad 2022