இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்

news18
Updated: October 8, 2018, 11:33 AM IST
இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடக்கம்
கோலாகலமாக தொடங்கிய போட்டி
news18
Updated: October 8, 2018, 11:33 AM IST
இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் அர்ஜென்டினாவில் கோலாகலமாக கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி, உற்சாகமாக நடைபெற்று வருகிறது.

மூன்றாவது இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் அர்ஜென்டினாவின் பியூனஸ்அயர்ஸ் நகரில் நடைபெறுகிறது. 15 முதல் 18 வயது வரையிலான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டிகள், வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கின. இதில், 32 போட்டிகள் 241 பிரிவுகளில் நடைபெறுகின்றன. இப்போட்டிகளில் பதக்கத்தை வேட்டையாடுவதற்காக 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போராடி வருகின்றனர். முன்னதாக, பிராம்மாண்ட தொடக்க நிகழ்ச்சி பியூனஸ் அயர்ஸ் நகரில் தொடங்கியது. வாணவேடிக்கையை அடுத்து, வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.

மைதானத்தில் அர்ஜென்டினாவின் கொடி ஏற்றப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகசங்கள் அரங்கேறின. தொடர்ந்து, விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டதுடன், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பேச், வரவேற்று பேசினார். பின்னர், அர்ஜென்டினா அதிபர் மோரிசியோ மெக்ரி, போட்டி தொடங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து, அர்ஜென்டினாவைச் சேர்ந்த பவுலா பாரேடோ மற்றும் சாண்டியாகோ லாங்கே ஆகியோர், மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் ஜோதியை ஏற்றிவைத்ததும், வாணவேடிக்கையில் பியூனஸ் அயர்ஸ் நகரமே ஜொலித்தது...

இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதில், இந்தியாவின் சார்பில், 47 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் தொடங்கியுள்ளன. இதற்கான, தொடக்க நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தலைமையில் இந்திய வீரர், வீராங்கனைகள் அணிவகுத்தனர்.
First published: October 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...