இங்கிலாந்து - மே.இ தீவுகள் 2-வது டெஸ்ட் போட்டி... மான்செஸ்டரில் இன்று பிற்பகல் தொடக்கம்

இதனால் இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளது.

இங்கிலாந்து - மே.இ தீவுகள் 2-வது டெஸ்ட் போட்டி... மான்செஸ்டரில் இன்று பிற்பகல் தொடக்கம்
மாதிரி படம்
  • Share this:
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் இன்று பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்க உள்ளது.

முன்னதாக சவுதாம்டனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என அந்த அணி முன்னிலை வகிக்கிறது.

இதனால் இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் மேற்கிந்திய தீவுகள் அணி உள்ளது. வின்ஸ்டன் கோப்பை மேற்கிந்திய தீவுகள் அணியின் வசம் உள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்று கோப்பையை தன் வசப்படுத்தும் முனைப்பில் இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.


Also read... கொரோனா சிகிச்சை முடிந்த முதல் நாளே பொதுநிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர்... அதிகாரிகள் கலக்கம்

முதல் போட்டியில் விளையாடாத ஜோ ரூட், ஸ்டுவர்ட் பிராட் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading