தடையை மீறி, காரில் மளிகைக்கடைக்கு சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது வழக்கு... சென்னை போலீஸ் நடவடிக்கை

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது 144 தடை உத்தரவை மீறியதாக சென்னை சாஸ்திரிநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தடையை மீறி, காரில் மளிகைக்கடைக்கு சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது வழக்கு... சென்னை போலீஸ் நடவடிக்கை
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங்
  • Share this:
144 தடை உத்தரவை மீறியதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் சிங் மீது சென்னை சாஸ்திரிநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நோய்த்தொற்று பரவுவது அதிகரித்து வரும் நிலையில் கடந்த 19-ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது சில தளர்வுகள் வழங்கப்பட்டு இந்த ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கள் வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் நடந்து சென்று பொருட்களை வாங்க வேண்டும் என தொடர்ந்து காவல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று  முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங் தனது காரில் சாஸ்திரி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து திருவான்மியூர் பகுதிக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்றுள்ளார்.


அப்போது  சாஸ்திரி நகர் போக்குவரத்து போலீசார் அவரை மடக்கி விசாரித்த போது காய்கறிகள் வாங்க திருவான்மியூர் செல்வதாக கூறியுள்ளார். இதனையடுத்து, போக்குவரத்து காவலர்கள் அவரிடம் காய்கறி வாங்க நடந்துதான் செல்ல வேண்டும்  காரில் செல்லக்கூடாது என தெரிவித்துள்ளனர்.

எனினும் முகக்கவசம் அணிந்து இருந்ததால் அவர் யாரென்பது காவல்துறையினருக்கு தெரியவில்லை எனவும், அவர்  ராபின் சிங் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்  போன்ற எந்த தகவலையும் கூறாமல் காரை விட்டுவிட்டு வேறு ஒரு காரை வரவழைத்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.Also read... வாக்கிங் சென்ற முதியவருக்கு அபராதம்: எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி..

பின்னர் அவர் மீது 144 தடை உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்து அவர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்தனர். அவருக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
First published: June 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading