கோப்பையை வெல்ல காரணமாக இருந்த பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்பஸ்!

news18
Updated: July 16, 2018, 2:03 PM IST
கோப்பையை வெல்ல காரணமாக இருந்த பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்பஸ்!
பிரான்ஸ் பயிற்சியாளர் டெஸ்சாம்பஸ்
news18
Updated: July 16, 2018, 2:03 PM IST
பிரான்ஸ் அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த அணியின் பயிற்சியாளர் டெஸ்சாம்பஸ்க்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

1998 உலகக்கோப்பை கால்பந்து தொடரில், டெஸ்சாம்பஸ் தலைமையில் பிரான்ஸ் அணி களமிறங்கியது. இத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி, பிரான்ஸ் முதல் முறையாக மகுடம் சூடியது... அன்றைய தினம் பிரான்சின் நாயகனாக டெஸ்சாம்பஸ் உருவெடுத்தார்.

இம்முறை, டெஸ்சாம்பஸ் பிரான்ஸ் அணியை அவர் வழிநடத்திச் சென்றார். இளம் வீரர்களை தேர்வு செய்து, ஜாம்பவான் அணிகளுக்கு கிலி ஏற்படுத்தினார். சிறந்த திட்டமிடல் காரணமாக, 20 ஆண்டுகளுக்குப் பின் சாம்பியன் கோப்பையை டெஸ்சாம்பஸ் வசப்படுத்தியுள்ளார். பயிற்சியாளர் டெஸ்சாம்பஸ் வகுத்துக் கொடுத்த வித்தைகளை வீர்ர்கள் களத்தில் வெளிப்படுத்தினர். இதன் எதிரொலியாக பிரான்ஸ் அணி வெற்றிபெற்றதும், வீரர்கள், தங்களது பயிற்சியாளரை அந்தரத்தில் மிதக்கச் செய்தனர்.

ஓர் அணியில் வீரராக 1998 உலகக்கோப்பையில் பங்கேற்று பட்டம் வென்று கொடுத்ததுடன், பயிற்சியாளராகவும் மகுடம் சூட, உறுதுணையான இருந்த 3-வது வீரர் என்ற பெருமைக்கு டெஸ்சாம்பஸ் சொந்தக்காரரானார். இதற்கு முன்பு, பிரேசிலின் மரியோ ஸகாலோ மற்ற்றும் ஜெர்மனியின் பெக்கன்பேவர் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
First published: July 16, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...