மனைவியை அழைத்துச்செல்லும் கோலியின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!

மனைவியை அழைத்துச்செல்லும் கோலியின் கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐ!
விராட் கோலி.
  • News18
  • Last Updated: October 7, 2018, 1:02 PM IST
  • Share this:
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மனைவிகளை அழைத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கேப்டன் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ நிராகரித்துள்ளது.

பிசிசிஐ விதிகளின்படி வெளிநாடு சுற்றுப்பயணங்களுக்கு வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் தங்களது மனைவியை அழைத்துச் சென்றாலும், அவர்களை வெளியில் தங்கவைக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

இதற்கு தீர்வுகாணும் விதமாக மனைவியை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டுமென கேப்டன் விராட் கோலி பிசிசிஐ இடம் வலியுறுத்தினார். ஆனால், இந்தக் கோரிக்கையை தற்போதைக்கு பரிசீலிக்கும் எண்ணமில்லை என பிசிசிஐ கூறிவிட்டது. அத்துடன், இதுகுறித்து நிர்வாகிகள் குழுதான் முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: October 7, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்