Home /News /sports /

சிட்னி டெஸ்ட் - முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆஸி. தடுமாற்றம்!

சிட்னி டெஸ்ட் - முக்கிய விக்கெட்டுகளை இழந்து ஆஸி. தடுமாற்றம்!

4-வது டெஸ்ட் போட்டி

4-வது டெஸ்ட் போட்டி

இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய போது ஆஸ்திரேலிய தொடக்க இணை நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. 27 ரன்கள் எடுத்த உஸ்மான் கவாஜா குல்தீப் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் ஆனார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
இந்தியாவிற்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

சிட்னியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 622 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணி 2-ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்று 3-ம் நாள் ஆட்டம் தொடங்கிய போது ஆஸ்திரேலிய தொடக்க இணை நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது. 27 ரன்கள் எடுத்த உஸ்மான் கவாஜா குல்தீப் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் ஆனார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஹாரிஸும் 79 ரன்களில் ஸ்டம்புகள் சிதற ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த LABUSCHAGNE மற்றும் ஷான் மார்ஷ்-ம் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர். சற்று முன்பு வரை ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது.

இந்திய பவுலர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: India vs Australia 2018

அடுத்த செய்தி