முகப்பு /செய்தி /விளையாட்டு / டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் ஓய்வு - மனதை உருக்கும் வீடியோ

டென்னிஸ் உலகின் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் ஓய்வு - மனதை உருக்கும் வீடியோ

ரொஜர் பெடரெர்

ரொஜர் பெடரெர்

Roger Federer | சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் கண்ணீருடன் விடைபெற்றார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

டென்னிஸில் பல்வேறு சாதனைகளை படைத்த ஜாம்பவான் ரோஜர் பெடரர், கடந்த சில நாட்களுக்கு முன் லேவர்ஸ் கோப்பை தொடர்தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் என அறிவித்தார். 41 வயதான இவர், தனது வயது மற்றும் உடல் நலன் கருதி ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், லேவெர்ஸ் கோப்பை தான் அந்த டென்னிஸ் ஜாம்பவானின் கடைசி போட்டி என்பதால் அந்த போட்டிக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. இந்நிலையில் ரோஜர் பெடரர் தனது நண்பரும் போட்டியாளருமான ரபேல் நடாலுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடினார்.

இவர்கள் சோக் மற்றும் டியோபி அணியை எதிர்கொண்ட நிலையில், சோக் அணி வென்றது. இதனையடுத்து ரோஜர் பெடரெர் கண்ணீருடன் விடைபெற்றார். அவரை ஜோகோவிச் உள்ளிட்ட வீரர்கள் தோளில் சுமந்து அரங்கை சுற்றி வலம் வந்தனர்.

இதனையடுத்து தன் ஓய்வு குறித்து பேசிய அவர், இன்று மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக கூறினார். மேலும் தன்னுடைய டென்னிஸ் பயணம் அற்புதமான ஒன்று, அதனை மீண்டும் செய்ய ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது மனைவி நினைத்திருந்தால் எப்போதோ தன்னை டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்பதை தவிர்த்திருக்கலாம், ஆனால் அவர் தொடர்ந்து உறுதுணையாக இருந்தார் என தெரிவித்தார்.

மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போதே கண்ணீர்விட்டு அழுதார். மேலும் அவரை பிரிவதை நினைத்து ரபேல் நடால் அவருடன் அமர்ந்து கண்ணீருடன் உணர்ச்சி வசப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது.

top videos

    ரோஜர் ஃபெடரர் இதுவரையில் 20 கிராண்ஸ்ட்லாம் போட்டிகளில் வென்றுள்ளார். தன்னுடைய 24 ஆண்டுகால டென்னிஸ் வரலாற்றில் 310 வாரங்கள் தொடர்ந்து தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தவர். மேலும் 6 ஏடிபி பட்டங்கள், 28 மாஸ்டர்ஸ் பட்டங்கள் என யாரும் எளிதில் கடந்து விட முடியாத சாதனைகளுக்கு சொந்தகாரர். அதேபோல், அதிக விம்பிள்டன் போட்டிகளில் வெற்றிபெற்றவர் என்ற மைல்கல்லையும் எட்டியுள்ளார். அவர் 8 விம்பிள்டன் தொடர்களில் வாகை சூடியுள்ளார்.

    First published:

    Tags: Roger Federer, Tennis