முகப்பு /செய்தி /விளையாட்டு / 24 ஆண்டுகள் 24 மணி நேரம் போல் உள்ளது - ஓய்வு அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரெர்!

24 ஆண்டுகள் 24 மணி நேரம் போல் உள்ளது - ஓய்வு அறிவித்தார் டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரெர்!

ரோஜர் பெடரெர்

ரோஜர் பெடரெர்

கடந்த 3 ஆண்டுகள் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை என பல்வேறு சவால்களை சந்தித்தேன். அதிலிருந்து மீண்டு வர கடுமையாக உழைத்தேன். இருப்பினும் எனது உடலின் திறன் எனக்கு தெரியும்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaSwitzerlandSwitzerland

அடுத்த வாரம் நடைபெறவுள்ள லேவர் கோப்பை தான், தனது இறுதி டென்னிஸ் போட்டியாக இருக்கும் என டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரெர் அறிவித்துள்ளார்.

டென்னிஸ் அரங்கில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் ரோஜர் பெடரர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022 லேவர் கோப்பை போட்டி தான் தனது கடைசி போட்டியாக இருக்கும் எனவும் முற்றிலுமாக டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில், “கடந்த 3 ஆண்டுகள் காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சை என பல்வேறு சவால்களை சந்தித்தேன். அதிலிருந்து மீண்டு வர கடுமையாக உழைத்தேன். இருப்பினும் எனது உடலின் திறன் எனக்கு தெரியும், சமீப காலமாக அதை தெளிவாக உணர்ந்து கொண்டேன். எனக்கு 41 வயதாகிறது, 24 ஆண்டுகளில் 1500 போட்டிகளுக்கு மேல் விளையாடி விட்டேன். இது நான் விடைபெற வேண்டிய தருணம் என கருதுகிறேன்” என தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த 24 ஆண்டுகள் சாகசம் மிக்க அனுபவமாக இருந்தது எனவும் சில சமயங்களில் அது 24 மணி நேரம் போல் தெரிவதாகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Retirement, Roger Federer, Tennis