கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் அதி தீவிர பக்தர் சுதிர் குமார் சவுத்ரி. கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் இவரை தெரியாமல் இருக்காது. அந்த அளவிற்கு சச்சின் மீதும் கிரிக்கெட் மீதும் பற்று கொண்டவர்.
சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்றும் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு நேரில் செல்லும் சுதிர் எப்போதும் போலவே உடலில் சச்சின் பெயரை Miss u sachin என்று எழுதி கொண்டும் , உடல் மற்றும் முகம் முழுவதும் இந்திய தேசிய கொடியின் வண்ணத்தையும் பூசி கொண்டு கையில் தேசிய கொடி மற்றும் வெண்சங்கை ஏந்தி கொண்டு டீம் இந்தியாவை மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
சச்சின் மீது எவ்வளவு தீவிர பற்று வைத்துள்ளாரோ அதே அளவிற்கு கிரிக்கெட் விளையாட்டையும் நேசிக்கும் பீஹாரை சேர்ந்த 40 வயதான மனிதரான இவர், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை கூட காண வந்திருந்தார். இந்நிலையில் சமீப காலமாக நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் தொற்றின் தீவிரம் மிக மோசமாக உள்ளது. எனவே டெஸ்ட் போட்டிகளுக்கு பின் நடந்த டி 20 போட்டிகளில், இரு போட்டிகளுக்கு மட்டுமே ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிராகு நடந்த 3 டி 20 போட்டிகள் ரசிகர்களின்றி காலி மைதானத்தில் நடந்தது.
இந்நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக சமீபத்தில் புனேவில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை மைதானத்திற்கு சென்று நேரில் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த போட்டியை நேரில் பார்க்க வேண்டும் என்ற சுதிர் குமார் சவுத்ரியின் பேராவலுக்கு அரசு விதித்த தடை பெரும் ஏமாற்றம் அளித்தது. ஆனாலும் சோர்ந்துவிடாமல் போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு அருகே அரை கிலோ மீட்டர் தொலைவில் ககுன்ஜி என்ற மலை உள்ளது.
View this post on Instagram
அந்த மலை உச்சிக்கு பாம்புகள் நிறைந்த காட்டு பாதை வழியாக நடந்தே சென்று குறிப்பிட்ட பொடியை கண்டு களித்தார். இது குறித்து பேசியுள்ள சுதிர், மலை உச்சியை அடைய சாலை மார்க்கமாக வழி உண்டு. ஆனால் அதில் சென்றால் நேரம் ஆகும் என்பதால், பாம்பு உள்ளிட்ட அச்சுறுத்தும் விலங்குகள் உள்ள காட்டு பாதையை தேர்வு செய்ததாக கூறினார். மிகப்பெரிய பாறைகளை எல்லாம் கடந்து உச்சியை அடையும் போது காயங்கள் ஏற்பட்டது. ஆனால் மலை உச்சியை அடைந்து கிரிக்கெட் போட்டியை பார்த்த பின் வலியும், பட்ட கஷ்டமும் பறந்து விட்டது என்று உற்சாகம் தெரிவித்துள்ளார் சுதிர். இவர் நின்ற மலை உச்சியிலிருந்து மைதானத்தில் நடக்கும் போட்டியை நேரடியாக காண முடியாது. அப்புறம் எப்படி சுதிர் போட்டியை பார்த்தார் என்கிறீர்களா.?
Indian cricket team super fan sudhir kumar gautam cheering for the team. #INDvENG thanks to cameraman. pic.twitter.com/5EJJ21YSJt
— SaiCric Krishna🏆🏏🎤🖋️ 🌱💂🎬 (@SaiKris75286313) March 26, 2021
Also read... ஏப்ரல் 1 முதல் இந்த வங்கிகளின் பாஸ்புக் மற்றும் செக்புக் செல்லாது? ஏன் தெரியுமா?
வீரர்கள் அல்லது போட்டியை என்னால் பார்க்க முடியவில்லை என்றாலும் என் கண்களுக்கு மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள மெகா திரை தெரிகிறது.ஒரு ஒரு முறை வீரர்கள் பவுண்டரி தட்டும் போதும் நான் இங்கிருந்து அவர்களை உற்சாகப்படுத்துவேன் என்று கூறி இது தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். நேரலையில் போட்டி ஒளிபரப்பப்பட்ட போது இந்திய வீரர்கள் பவுண்டரி அடித்த நேரங்களில் மலை உச்சியில் இருந்த சுதிர் தேசிய கொடியை ஆட்டி உற்சாகப்படுத்தியது கேமராவில் காட்டப்பட்டது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sachin tendulkar, Team India