ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட பிரேக் டான்ஸ்- தயாராகும் தமிழர்கள்!

B-boys

சினிமாத்துறையில் ஒருவர்கூட பிரேக்கிங் டான்ஸ் வகையினை ஆகாதவர்கள் என்பதையும் தொழில்முறை ஆட்டக்காரர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ள பிரேக் டான்ஸ் வகையினை கற்றுத் தேர்ந்தவர்கள் இந்தியாவில் வெகு சிலர் மட்டுமே. அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட இந்த டான்ஸ் பயிற்சியை இப்போதிருந்தே தீவிரமாக மேற்கொண்டால் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சென்னையைச் சேர்ந்த பிரேக் டான்ஸர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

உலக அளவில் உள்ள தடகள வீரர்கள் கனவாக திகழ்வது ஒலிம்பிக் போட்டிகள். நூற்றாண்டுகளைக் கடந்து கோலோச்சி நிற்கும் ஒலிம்பிக் போட்டிகள் பல பரிணாம வளர்ச்சிகளை கண்டே வந்திருக்கின்றன. அதில் ஒரு பகுதியாக பிரேக்கிங் எனப்படும் ஒரு குறிப்பிட்ட வகை பிரேக் டான்ஸ் போட்டிகளை ஒலிம்பிக்கில் சேர்க்க அதற்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரேக்கிங் எனப்படுவது ஒரு கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நடனமாக பார்க்கப்படுகிறது. நியூயார்க் நகரை மையமாகக் கொண்ட பிரேக்கிங் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிக்காக, அவர்களுடைய போராட்டங்களை பிரதிபலிக்கும் வகையிலான பார்க்கப்பட்டது. பின்னாட்களில் அது நவீன உலகின் டான்ஸ் வகையாக மாறி தற்போது ஒலிம்பிக்கில் சேரும் முதல் டான்ஸ் வகை என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் இடம்பெறுவதற்கு கடுமையான உடலுழைப்பு அவசியம். அதில் இடம் பெற்றிருக்கும் அனைத்து போட்டிகளும் அந்த வகையைச் சேர்ந்தவையே. இதன் காரணமாகத்தான் பிரேக்கிங் டான்ஸ் வகையும் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது. டான்ஸ் ஆடுவதில் என்ன கடுமையான உடல் உழைப்பு தேவைப்படுகிறது என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலை இந்த டான்ஸை பார்க்கும்போது நாம் தெரிந்து கொள்ள முடியும்.

பிரேக்கிங் டான்ஸ் ஆடுபவர்கள் தலைகீழாக நின்று கொண்டும், ஒற்றைக் கையில் stunt அடித்தும், பம்பரம் போல சுற்றியும் ஆடுவதை காணும்போது இதற்கு கடுமையான பயிற்சி தேவை என்பதை நம்மால் உணர முடிகிறது.

அமெரிக்காவில் ஆடப்படும் பிரேக்டான்ஸ் வகைக்கும் இந்தியாவில் ஆடப்படும் பிரேக் டான்ஸ் வகைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பிரபுதேவா ஆடுவது போன்ற ஆட்ட வகை இந்தியாவில் பிரேக்டன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டிருக்கும் பிரேக் டான்சில் இந்த வகை சேர்த்துக் கொள்ளப் பட மாட்டாது. அதற்கென தனியான இலக்கணங்கள் உள்ளன என்றும் அந்த முறையை கையாண்டால் மட்டுமே ஒலிம்பிக்கில் பங்கு பெற முடியும் என்றும் தொழில்முறை பிரேக் டான்ஸ் ஆடுபவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Also read... Bigg Boss Tamil 4: ஆரியிடம் மோதும் அனிதா, ரம்யா - இன்று 'தரமான சம்பவம் இருக்கு'!

இந்தியாவின் பிரேக் டான்சில் இருந்து இவர்களை வித்தியாசப்படுத்திக் கொள்ள இவர்களை B-boys என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்தியாவின் டான்சினை பிரேக் டான்ஸ் என்றும் அமெரிக்காவின் டான்சினை பிரேக்கிங் என்றும் சொல்லி வகைப்படுத்துகிறார்.

உடல் உழைப்பினை செலுத்தி பல ஆண்டுகள் கடுமையான பயிற்சிக்கு பின் ஆடப்படும் ஆட்டம் என்பதால் வெகு சிலர் மட்டுமே பிரேக்கிங் டான்சில் ஆர்வம் செலுத்துகிறார்கள்.

மேலும் இந்த பிரேக்கிங் டான்ஸ் ஆடுவதால் எந்தவிதமான அங்கீகாரமும் கிடைப்பதில்லை என்ற ஒரு காரணத்தினாலும் இவ்வளவு நாள் மக்களின் கவனம் இதன் பக்கம் திரும்பாமல் இருந்தது. தற்போது ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு இருப்பதன் மூலம் அதிக மக்கள் பிரேக்கிங் மீது ஆர்வம் செலுத்துவார்கள் என்று டான்ஸர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

ஒலிம்பிக்கில் பிரேக்கிங் டன்ஸ் இன் தேர்வுமுறை இலக்கணங்களை பின்பற்றுதல், அதிகமான கடின ஸ்டெப்களை ஆடுதல், இசைக்கேற்ப ஆடுதல், உடல் வலிமை, ஆட்டத்திறன் ஆகியவற்றை பின்பற்றி மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

சினிமாத்துறையில் ஒருவர்கூட பிரேக்கிங் டான்ஸ் வகையினை ஆகாதவர்கள் என்பதையும் தொழில்முறை ஆட்டக்காரர்கள் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

ஒலிம்பிக்கின் பல விளையாடுக்களை கற்றுக் கொள்வதற்கு அதிக பொருட்செலவு அவசியப்படுகிறது. ஆனால் ஒரு ரூபாய் செலவு கூட இல்லாமல் பிரேக்கிங் டான்ஸ் வகையினை ஒருவரால் கற்க முடியும். இதன் மூலம் சாமானியரும் ஒலிம்பிக் வரை செல்லும் வாய்ப்பை இந்த பிரேக்கிங் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: