Home /News /sports /

Tamil Nadu Women's League: ஒரே நாளில் 43 கோல்கள்.. மலைக்க வைத்த மகளிர் கால்பந்து...!

Tamil Nadu Women's League: ஒரே நாளில் 43 கோல்கள்.. மலைக்க வைத்த மகளிர் கால்பந்து...!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
தமிழ்நாடு மகளிர் கால்பந்து லீக் போட்டி ஆரம்பித்த முதல் நாளே 43 கோல்கள் அடிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு கால்பந்து சங்கம் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான லீக் போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பெண்களுக்கான லீக் போட்டி சென்னை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் நேற்று தொடங்கியது.

பெண்களுக்கான கால்பந்து லீக் தொடரில் தமிழ்நாடு போலீஸ், சேது எஃப்சி, எஃப்சி தமிழச்சி, வாவ் உமேன், சேது எஃப்ஏ, மினர்வா எஃப்சி, ஃபுட்பால் பிளஸ் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்றன.

முதல் நாளான நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி, மினராவ் அணியை 16-0 என்ற கோல் கணக்கில் வென்றது. தமிழ்நாடு எஃப்சி அணி வாவ் உமேன் அணியை 9-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. சேது எஃப்சி அணி, சேது எஃப்.ஏ அணியை 16-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.



போட்டி 1 : மினராவ் அணியை புரட்டி எடுத்த தமிழ்நாடு போலிஸ் அணி 16-0

தமிழ்நாடு போலீஸ் அணியில் லாவண்யா 5 கோல்கள் அடித்தார். இன்பரசி ஹட்ரிக் கோலும் நித்யா மற்றும் செலினா தலா 2 கோல்கள் அடித்தனர்.

போட்டி 2 : வாம் உமேன் அணியை வீழ்த்திய தமிழ்நாடு எஃப்சி 9-1

போட்டி 3 : சேது எஃப்.ஏ அணியை வீழ்த்திய சேது எஃப்.சி 16-1

சத்யா, மாளவிகா தலா 4 கோல்கள் அடித்தனர். சுமித்ரா 3 கோல்களும், சந்தியா 2 கோலும் அடித்தனர்.
Published by:Vijay R
First published:

Tags: Football

அடுத்த செய்தி