ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் நிலை என்ன..? எத்தனை தங்கம் தெரியுமா?..

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தின் நிலை என்ன..? எத்தனை தங்கம் தெரியுமா?..

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர்கள்

தேசிய விளையாட்டு போட்டியில் தமிழக வீரர்கள்

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 3 வீரர்கள் மட்டும், பாதி மைதானத்தில் விளையாடும் கூடைப்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு தேசிய விளையாட்டு போட்டியிலும் இப்போட்டி முதல்முறையாக சேர்க்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ahmadabad (Ahmedabad) [Ahmedabad], India

தேசிய விளையாட்டு போட்டியில் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு ஒரு தங்கம், இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று சாதனைப் படைத்துள்ளது. பேட்மிண்டன் மற்றும் நீச்சல் பிரிவிலும் தமிழக வீரர்கள் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் தேசிய விளையாட்டு போட்டியில் கூடைப்பந்தில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் தமிழக வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தனர். இதில் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாடியது. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழ்நாடு முதல் பாதியில் 46 க்கு 32 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தனர். இரண்டாவது பாதியிலும் தமிழ்நாடு வீரர்களின் கையே ஓங்கி இருந்தது இறுதியில் 97க்கு 89 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

மகளிர் பிரிவில் தெலங்கானாவை எதிர்கொண்ட தமிழ்நாடு, 62-67 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.

டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 3 வீரர்கள் மட்டும், பாதி மைதானத்தில் விளையாடும் கூடைப்பந்து போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. நடப்பு தேசிய விளையாட்டு போட்டியிலும் இப்போட்டி முதல்முறையாக சேர்க்கப்பட்டது. இதன் இறுதி ஆட்டத்தில், ஆடவர் பிரிவில், தமிழ்நாடு அணி - உத்திரபிரதேச அணியிடம் 18-21 என்ற புள்ளிகள் கணக்கில் நூழிலையில் வெற்றியை இழந்தது.

Also Read : 77 பந்துகளில் 205 ரன்கள்... டி20-ல் இரட்டை சதம் அடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்

பேட்மிண்டன் விளையாட்டில் தமிழ்நாடு வீரர்கள் ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தையும், கலப்பு இரட்டையர் மூன்றாமிடத்திற்கான போட்டியில் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

நீச்சல் பிரிவு ஆடவர் 50 மீ பட்டர்பிளே பிரிவில் பெனிடிக்‌ஷன் ரோஹித் வெள்ளி வென்றார்.

புள்ளி பட்டியல்

ஏழாம் நாள் போட்டிகள் முடிவில் தமிழ்நாடு அணி 19 தங்கம், 20 வெள்ளி, 19 வெண்கலம் என 58 பதக்கங்களை கைப்பற்றி பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கிறது. 41 தங்கப்பதக்கத்துடன் சர்வீஸஸ் அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

Published by:Raj Kumar
First published:

Tags: Game, Sports, Tamilnadu