டோக்கியோ ஒலிம்பிக் சிட்டியில் பயிற்சியை தொடங்கிய தமிழர்கள்!

கோப்புப் படம்

விளையாட்டு உலகின் உட்சபட்ச போட்டியான ஒலிம்பிக் தொடர் வரும் 23 ம் தேதி டோக்கியோவில் களைகட்டவுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
விளையாட்டு உலகின் உட்சபட்ச போட்டியான ஒலிம்பிக் தொடர் வரும் 23 ம் தேதி டோக்கியோவில் களைகட்டவுள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் நேற்று தனி விமானம் மூலம் டோக்கியோ சென்றடைந்தனர்.

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 127 வீரர்கள் களமிறங்குகின்றனர். இதில் தமிழகத்திலிருந்து 11 வீரர்கள் தேர்வாகி சாதனை நிகழ்த்தியுள்ளனர். இந்தியா சார்பில் பாய்மர படகுப்போட்டியில் களமிறங்கும் நான்கு வீரர்களும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.

சென்னையை சேர்ந்த நேத்ரா பாய்மர படகு போட்டியின்  லேசர் ரேடியல் பிரிவிலும், வருண் மற்றும் கணபதி ஆகியோர் 49er  பிரிவிலும், விஷ்ணு சரவணன் லேசர் STD பிரிவிலும் பங்கேற்கவுள்ளனர்.

Also Read : கோலியா? பாபரா? இப்பவே சண்டையை ஆரம்பித்த ரசிகர்கள்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக டோக்கியோ சென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் இன்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். டோக்கியோ சிட்டியில் உள்ள கடலில் இந்திய கொடியுடன் கூடிய பாய்மர படகில் தமிழக வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.கட்லில் காற்றின்  திசைக்கு ஏற்ப பாய்மரத்தை அசைத்து இலக்கை நோக்கி  வீரர்கள் முன்னேறி சென்ற காட்சி இந்தியாவின் பதக்க நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: