முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘செஸ் ஒரு சூதாட்டம்’ என நம்பும் தாலிபான்கள்: செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆப்கான் வீரர்களை அனுப்பும் அதிசயம்!

‘செஸ் ஒரு சூதாட்டம்’ என நம்பும் தாலிபான்கள்: செஸ் ஒலிம்பியாட்டிற்கு ஆப்கான் வீரர்களை அனுப்பும் அதிசயம்!

தாலிபான்கள் செஸ் விளையாட்டை சூதாட்டம் என நம்புகிறார்கள்.

தாலிபான்கள் செஸ் விளையாட்டை சூதாட்டம் என நம்புகிறார்கள்.

Chess Olympiad: தாலிபான்கள் செஸ் விளையாடுவது ஒரு வகையான சூதாட்டம் என்றும் அது பிரார்த்தனை செய்வதிலிருந்து மனிதர்களைத் திசை திருப்புகிறது எனவும் நம்புகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

1990களில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டிலிருந்த காலகட்டத்தில் ஹாஜி ஷிருல்லா என்ற காபூலைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தன்னுடைய சகோதரருடன் ஒரு அறையில் செஸ் விளையாடிக்கொண்டிருந்தார்.

இதை அறிந்த தாலிபான்கள் அந்த அறைக்குள் நுழைந்து செஸ் போர்டு மற்றும் காயின்களை எரித்துவிட்டு. செஸ் விளையாடிய குற்றத்திற்காக இருவரையும் சிறையில் அடைத்தார்கள்.

1990களில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் கட்டுப்பாட்டிலிருந்த காலகட்டத்தில் ஹாஜி ஷிருல்லா என்ற காபூலைச் சேர்ந்த வணிகர் ஒருவர் தன்னுடைய சகோதரருடன் ஒரு அறையில் செஸ் விளையாடிக்கொண்டிருந்தார்.

இதை அறிந்த தாலிபான்கள் அந்த அறைக்குள் நுழைந்து செஸ் போர்டு மற்றும் காயின்களை எரித்துவிட்டு. செஸ் விளையாடிய குற்றத்திற்காக இருவரையும் சிறையில் அடைத்தார்கள்.

அதன் பின்பு தாலிபான்கள் தங்கள் ஆட்சி நிர்வாகத்தை இழந்து, அமெரிக்கப் படைகள் அங்கு முகாமிட்ட பிறகே மீண்டும் செஸ் விளையாடத்தொடங்கப்பட்டது.

ஆன்லைனில் அல்லாமல் நேரடியாக போர்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடைசியாக ஜியார்ஜியாவின் பட்டுமியில் 2018-ம் ஆண்டுதான் நடந்தது. அதில் பங்குபெற்ற ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி முன்னணி அணிகளில் ஒன்றாகப் போட்டியை நிறைவு செய்தது.

தாலிபான்கள் செஸ் விளையாடுவது ஒரு வகையான சூதாட்டம் என்றும் அது பிரார்த்தனை செய்வதிலிருந்து மனிதர்களைத் திசை திருப்புகிறது எனவும் நம்புகின்றனர். அதனால்தான் மீண்டும் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைச் சென்ற ஆண்டு கைப்பற்றியவுடன்  ஏராளமான செஸ் வீரர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். தொழில்முறை செஸ் வீரர்கள் பயிற்சி எடுத்துக்கொள்வதற்காகக் கூட செஸ் போர்டைத் தொட அச்சப்பட்டனர்.

ஆனால் தாலிபான்களின் முந்தைய ஆட்சியை விட இந்த ஆட்சி ஓரளவு சில தளர்வுகளுடன் நடத்தப்படுவதால் இந்த செஸ் ஒலிம்பியாட்டுக்கு ஆப்கன் வீரர்கள் அனுப்பப்படலாம் எனச் சொல்லப்பட்டது. அதே நேரத்தில் அதற்கான வாய்ப்புகள் இல்லையென்றும் சொல்லப்பட்டது.

ஆப்கன் செஸ் வீரர் சாகாவதி செபர்

இந்நிலையில் இந்தியாவில் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்குபெறத் தாலிபான்களிடம் அனுமதி வேண்டி ஆப்கான் செஸ் வீரர்கள் காத்திருந்தனர்.

ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்த செஸ் ஒலிம்பியாட்டில் பங்குபெற அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, இந்திய வீசாவும் உடனே கிடைத்துள்ளது. இதனால் ஐந்து செஸ் வீரர்கள் கொண்ட செஸ் அணி ஆப்கானிலிருந்து மாமல்லபுரம் விரைகிறது.

அமினி ஹபிபுல்லா(கேப்டன்), மிர்ஸாத் வகாபுதீன், சாகாவதி செபர், முராடி முகமது யூசுஃப் மற்றும் சுலைமான் அகமது அஷ்ராபி. இதில் அமினி ஹபிபுல்லா உலக அளவில் அதிக ரேட்டிங் கொண்டுள்ள ஒரு செஸ் வீரர்.

இன்னும் பெண்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளையே விதித்துள்ள தாலிபான்கள் பெண்கள் அணியை அனுப்புவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் பெண்கள் பிரிவில் அந்நாட்டுச் சார்பில் எந்த அணியும் பங்குபெறவில்லை.

தாலிபான்கள் செஸ் விளையாடுவது ஒரு வகையான சூதாட்டம் என்றும் அது பிரார்த்தனை செய்வதிலிருந்து மனிதர்களைத் திசை திருப்புகிறது எனவும் நம்புகின்றனர்.

First published:

Tags: Chess, Chess Olympiad 2022, Taliban