ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனின் பயோபிக்... தயாராகிறார் நடிகை டாப்ஸி!

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனின் பயோபிக்... தயாராகிறார் நடிகை டாப்ஸி!

இத்திரைப்படத்தை ராகுல் தோலக்கியா இயக்க வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தை ராகுல் தோலக்கியா இயக்க வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தை ராகுல் தோலக்கியா இயக்க வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டி கேப்டன் மிதாலி ராஜின் பிறந்தநாளான இன்று அவரது பயோபிக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  ‘சபாஷ் மிது’ என்னும் பெயரிடப்பட்டுள்ள மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படத்தில் மிதாலியாக நடிகை டாப்ஸி நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இத்திரைப்படத்தை ராகுல் தோலக்கியா இயக்க வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிதாலி உடனான பயணத்தை இன்று அவரது பிறந்தநாளில் இருந்து தொடங்குவதாக டாப்ஸி அறிவித்துள்ளார்.

  டாப்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் கேப்டன் மிதாலி ராஜ். எங்கள் அனைவரையும் நீங்கள் பெருமை அடையச் செய்துள்ளீர்கள். திரையில் உங்களை பிரதிபலிக்க நான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மிகவும் பெருமை அடைகிறேன். உங்களை சிறந்த முறையில் திரையில் பிரதிபலிப்பதே உங்களுக்கான எனது பிறந்தநாள் பரிசு. ‘கவர் ட்ரைவ்’ கற்றுக்கொள்ள தயாராக உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் பார்க்க: HDFC வங்கியின் ஆன்லைன் சேவை 2-ம் நாளாக முடக்கம்..!

  Published by:Rahini M
  First published:

  Tags: Mithali Raj, Taapsee Pannu