தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி-20 போட்டியில் இந்திய அணி, 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரிலும் சமநிலையை எட்டியது.
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 போட்டிகளை கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், 3 போட்டிகளின் முடிவில் தென்ஆப்பிரிக்கா 2-1 என முன்னிலை பெற்றது. இதனால், தொடரை இழக்காமல் இருக்க, ராஜ்கோட்டில் நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணி, 40 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், நடுவரிசையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்ட்யா 46 ரன்கள் விளாசி, அணிக்கு வலு சேர்த்தார். கடைசிக் கட்டத்தில் அதிரடியில் மிரட்டிய தினேஷ் கார்த்திக், அரைசதம் கடந்து அசத்தினார். இதனால், இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்தது.
பின்னர், இலக்கை துரத்திய தென்ஆப்பிரிக்க அணியில், தொடக்க வீரர் பவுமா 8 ரன்கள் சேர்த்திருந்த போது காயம் ஏற்பட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி, விக்கெட்டை பறிகொடுத்த வண்ணம் இருந்து. இதனால், 16.5 ஓவர்களில், 87 ரன்களில் ஆல்-அவுட்டானது.
Also Read: புஜாரா பேச்சைக் கேட்டு சதத்தை கோட்டை விட்டேன் - கடுப்பான ரிஷப் பண்ட்
இதன் மூலம் 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றதுடன், 2-2 என தொடரில் சமநிலையை எட்டியது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக அவேஷ் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.இப்போட்டியில், 87 ரன்களில் ஆல்-அவுட்டானதே டி-20 கிரிக்கெட்டில் தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்தபட்ச ஸ்கோரானது. அதேவேளையில், தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆட்டநாயகன் தினேஷ் கார்த்திக்
27 பந்துகளில் 55 ரன்கள் விளாசிய தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக ஜொலித்தார். மேலும், சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அவர் அடித்த முதல் அரைசதமாகவும் இது பதிவானது.இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5-வது மற்றும் கடைசிப் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cricket, Dinesh Karthik, Hardik Pandya, Rishabh pant, South Africa, T20