ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர்: இறுதி போட்டியில் நுழைந்த பி.வி.சிந்து!

பி.வி.சிந்து!

ஆடவர் இரட்டையர் பிரிவில் 10ம் நிலையில் உள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, 4ம் நிலையில் உள்ள டென்மார்கின் Kim Astrup மற்றும் Anders Skaarup Rasmussen இணையை எதிர்த்து அரையிறுதியில் விளையாட உள்ளது.

  • Share this:
ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிக்குள் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து நுழைந்துள்ளார்.

4ம் நிலையில் உள்ள டென்மார்கின் Mia Blichfeldt-ஐ 22-20, 21-10 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்களில் வீழ்த்தி மகுடத்திற்கான இறுதி மோதலில் இடம் பிடித்துள்ளார் சிந்து. இந்தப் போட்டி வெறும் 43 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. முன்னதாக கால் இறுதியில் தாய்லாந்து வீராங்கனை Busanan Ongbamrungphan-ஐ 21-16, 23-21 என்ற நேர் செட்டில் சிந்து வீழ்த்தியிருந்தார். 2019ல் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னர் சிந்து பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் மற்றும் தாய்லாந்தின் Pornpawee Chochuwong ஆகிய இருவருக்கிடையிலான மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனை பி.வி.சிந்துவுடன் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். இறுதிப் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இதனிடையே ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த், டென்மார்கின் Viktor Axelsenயிடம் 21-13, 21-19 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார். இதுவும் நேர் செட்டில் முடிந்த போட்டியாகும்.

மேலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் 10ம் நிலையில் உள்ள இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை, 4ம் நிலையில் உள்ள டென்மார்கின் Kim Astrup மற்றும் Anders Skaarup Rasmussen இணையை எதிர்த்து அரையிறுதியில் விளையாட உள்ளது.

 
Published by:Arun
First published: