35 நிமிடங்களில் பி.வி.சிந்துவை வீழ்த்தி ஸ்விஸ் ஓபன் பட்டம் வென்ற கரோலினா மரின்!

35 நிமிடங்களில் பி.வி.சிந்துவை வீழ்த்தி ஸ்விஸ் ஓபன் பட்டம் வென்ற கரோலினா மரின்!

கரோலினா மரின்

கரோலினா மரினை பொறுத்தவரையில் இந்த ஆண்டில் அவர் வெல்லும் 3வது பட்டம் இதுவாகும்.

  • Share this:
ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் கரோலினா மரினிடம் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார்.

ஸ்விட்சர்லாந்தின் பசெல் நகரில் ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் இறுதி போட்டியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டார். இவர்கள் இருவரும் முன்னதாக 14 போட்டிகளில் எதிர்த்து விளையாடி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டியில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

உலகின் 3ம் நிலை வீராங்கனையான கரோலினா மரின், 7ம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்துவை 21-12, 21-5 என்ற நேர் செட்டில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த போட்டி ஒரு தரப்பாக 35 நிமிடங்களில் நடந்து முடிந்தது. இன்றைய போட்டியில் பி.வி.சிந்து மரினிடம் சரணடைந்தார் என்றே சொல்ல வேண்டும். முதல் செட்டில் மரினுக்கு 21-12 என்ற கவுரவமான போட்டியை அளித்த சிந்துவால் 2வது செட்டில் 5 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது பரிதாபமாக அமைந்தது.2019 உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு பின்னர் பி.வி.சிந்து விளையாடும் முதல் தொடர் இதுவாகும். 2019ல் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நொசாமி ஓகுராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.ஆனால் கரோலினா மரினை பொறுத்தவரையில் இந்த ஆண்டில் அவர் வெல்லும் 3வது பட்டம் இதுவாகும். முன்னதாக தாய்லாந்தில் நடைபெற்ற 2 தொடர்களில் கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். அவரின் வெற்றி ஓட்டம் தொடருகிறது.
Published by:Arun
First published: