நம்பிக்கையின் உருவமாய் மகன் பிறந்துள்ளான்... சுரேஷ் ரெய்னா உருக்கம்..!

சென்னை சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில், "குட்டி தல் வந்துவிட்டார்" எனக் கொண்டாட்டத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையின் உருவமாய் மகன் பிறந்துள்ளான்... சுரேஷ் ரெய்னா உருக்கம்..!
சுரேஷ் ரெய்னா
  • Share this:
இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரமான சுரேஷ் ரெய்னாவுக்கு இரண்டாவது குழந்தையாக மகன் பிறந்துள்ளான்.

சுரேஷ் ரெய்னா - பிரியங்கா தம்பதியருக்கு இன்று இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தைக்கு சுரேஷ் ரெய்னா, ரியோ ரெய்னா எனப் பெயரிட்டுள்ளார். இத்தம்பதியினருக்கு ஏற்கெனவே 2 வயதில் கிரேசியா என்றதொரு பெண் குழந்தை உள்ளது.

ரியோ ரெய்னா வருகையை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரெய்னா, "அதிசயம், நம்பிக்கை, வாய்ப்புகள் மற்றும் சிறந்தொரு உலகத்தை உருவாக்குவதற்கான துவக்கமாய்..! எங்கள் மகன், கிரேசியாவின் தம்பி- ரியோ ரெய்னாவை வரவேற்கிறோம். எல்லைகள் கடந்த அமைதியை வலியுறுத்து, புதுப்பித்தலையும் வளத்தையும் அனைவரது வாழ்விலும் இவன் ஏற்படுத்துவானாக!" எனக் குறிப்பிட்டுள்ளார்.


சென்னை சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில், "குட்டி தல் வந்துவிட்டார்" எனக் கொண்டாட்டத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

First published: March 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading