சீனர்களைப் போல இருக்கிறீர்கள் என்று இழிவுபடுத்துகிறீர்களா? இது வெட்கக்கேடு - இந்திய கால்பந்து கேப்டன் ஆவேசம்!

வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் முகத்தில் எச்சில் உமிழப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் புகைப்படம் வெளியிட்டுள்ளது. இப்படியான இன துவேஷம் கடுமையான கண்டனத்திற்குரியது. 

சீனர்களைப் போல இருக்கிறீர்கள் என்று இழிவுபடுத்துகிறீர்களா? இது வெட்கக்கேடு - இந்திய கால்பந்து கேப்டன் ஆவேசம்!
சுனில் சேத்ரி
  • Share this:
வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களை, சீனர்கள் என்று கேலி செய்தும், அவமானப்படுத்தியும் வரும் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இது  மிகவும் இழிவான, வெட்கப்பட வேண்டிய செயல் என்று இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில், மைசூரில் நாகாலாந்தைச் சேர்ந்த இரு மாணவர்களை காய்கறிக் கடைக்குள் வரவிடாமல் தடுத்திருக்கிறார்கள். அவர்களிடம் ஆதார் அட்டை இல்லையென்பதால் அவர்கள் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.

”உங்கள் பகுதியில் கொரோனா வைரஸ் உருவாகியிருந்து, உங்களை வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இழிவாக நடத்தினால் உங்களின் மனநிலை என்னவாக இருக்கும்? இது இழிவானது. நீங்கள் வெட்கப்படவேண்டும். இந்த அணுகுமுறையை மாற்றிக்கொள்வதுதான் உங்களுக்கு நல்லது” என்று வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்தவர்களை இழிவாக நடத்துபவர்களுக்கு சுனில் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.


இந்தியக் கால்பந்து அணியின் சார்பாக, வெளியில் தெரிவிக்கப்படாத தொகை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனர்களைப் போல இருப்பதாக வடகிழக்கு மாநிலத்தவர்கள் தொடர்ச்சியாக அவமானப்படுத்துகிறார்கள். சீனாவில் இருந்து வைரஸ் பரவியதால், வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தவர்களையும் அவமானப்படுத்துவதும் நடந்துவருகிறது. கடந்த வாரம் வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் முகத்தில் எச்சில் உமிழப்பட்டதாக செய்தி நிறுவனங்கள் புகைப்படம் வெளியிட்டுள்ளது. இப்படியான இன துவேஷம் கடுமையான கண்டனத்திற்குரியது. 

Also See..https://tamil.news18.com/news/tamil-nadu/madhurai-mp-su-venkatesan-announces-drawing-article-painting-and-literature-competitions-through-whatsapp-mg-274309.html
First published: April 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading