Home /News /sports /

ஆசியக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம்: சுனில் சேத்ரி

ஆசியக் கோப்பையில் இந்திய அணியை வீழ்த்துவது கடினம்: சுனில் சேத்ரி

சுனில் சேத்ரி. (Twitter/Indian Football Team)

சுனில் சேத்ரி. (Twitter/Indian Football Team)

India will be difficult to beat in Asian Cup | ஏ.எஃப்.சி. கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது.

  • News18
  • Last Updated :
    ஆசியக் கோப்பை தொடரில் இந்திய கால்பந்து அணியை வெல்வது கடினம் என்று கேப்டன் சுனில் சேத்ரி கூறியுள்ளார்.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை 17-வது ஏ.எஃப்.சி. கோப்பை கால்பந்து தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் சுற்றுப் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.

    இந்திய கால்பந்து அணி, Indian Football Team
    இந்திய கால்பந்து அணி. (Twitter/Indian Football Team)


    இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் ‘ஏ’ பிரிவில் ஐக்கிய அரபு அமீரகம், தாய்லாந்து, பஹ்ரைன் ஆகிய நாட்டு அணிகள் உள்ளன. பிஃபா தர வரிசையில் 97-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 4-வது முறையாக ஏ.எஃப்.சி. கோப்பை தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்பு 1964, 1984, 2011 ஆண்டுகளில் தகுதி பெற்றது. அதன் பிறகு, 8 ஆண்டுகள் கழித்து தற்போது தகுதி பெற்றுள்ளது.

    போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கூறுகையில், “மற்ற அணிகள் எங்களது அணியை எதிர்கொள்வது அவ்வளவு எளிதாக இருக்காது என்பதை நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன். நாங்கள் தோல்வியை வெறுப்பவர்கள். அண்மையில் அதை நிரூபித்திருக்கிறோம். நாங்கள் திட்டமிட்டபடி செயல்படுவோம்” என்று தெரிவித்தார்.

    சுனில் சேத்ரி, Sunil Chhetri
    சுனில் சேத்ரி. (Twitter/Indian Football Team)


    இந்திய அணி, கடந்த 1951, 1962 ஆகிய ஆண்டுகளில் ஆசியக் கோப்பை கால்பந்து தொடரில் தங்கப் பதக்கத்தையும், 1956 ஒலிம்பிக்கில் 4-ம் இடத்தையும் பெற்றிருந்தது. தற்போது மீண்டும் இந்திய அணி எழுச்சி பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 6-ம் தேதி தாய்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Football, Sunil Chhetri

    அடுத்த செய்தி