ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் பதிவிற்கு கெத்தாக ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை - இணையத்தில் வைரல்

ட்விட்டரில் கிரிக்கெட் ரசிகரின் பதிவிற்கு கெத்தாக ரிப்ளை செய்த சுந்தர் பிச்சை - இணையத்தில் வைரல்

சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலக கோப்பை போட்டி நேற்று நடைபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 53 பந்துகள் விளையாடிய விராட் கோலி, 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • inter, IndiaAmericaAmerica

  டி 20 உலக கோப்பை போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதற்கு இன்று தீபாவளி வாழ்த்து சொல்லி ட்விட்டரில் பகிர்ந்த கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயலர் சுந்தர் பிச்சை, ஒரு கிரிக்கெட் ரசிகருக்கு சுவையான பதிலடி கொடுத்தது இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து ரசிக்க வைத்திருக்கிறது.

  இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலக கோப்பை போட்டி நேற்று நடைபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 53 பந்துகள் விளையாடிய விராட் கோலி, 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  இதற்கு கூகுள் நிறுவன தலைமை செயலர் சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று தனது தீபாவளி வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டார். மேலும், நான் நேற்றைய போட்டியின் கடைசி 3 ஓவர்களை பார்த்து இன்றைய தீபாவளி பண்டிகையை கொண்டாடினேன் என பதிவிட்டிருந்தார்.

  இதையும் படிக்க : மோடி முதல் அனுஷ்கா சர்மா வரை... விராட் கோலியின் ஆட்டத்தை ரசித்து வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்..

  இதற்கு கிரிக்கெட் ரசிகர் ஒருவர், “நீங்கள் முதல் மூன்று ஓவர்களையும் பார்க்க வேண்டும்” என இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டமிழந்ததை மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தார்.

  அதற்கு சுந்தர் பிச்சை, “நான் அதையும் பார்த்தேன். புவனேஷ்வர் குமாரும், அர்ஷதீப் சிங்கும் சிறப்பாக பந்து வீசினார்கள்” என பாகிஸ்தான் பேட் செய்த முதல் மூன்று ஓவர்களை குறிப்பிட்டு நகைச்சுவையாக பதிவிட்டிருந்தார்.  அவரது பதில், கிரிக்கெட் ரசிகர்களிடையே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: India vs Pakistan, Indian cricket team, Sundar pichai, T20 World Cup