Home /News /sports /

சதுரங்க விளையாட்டின் ராஜா சிலுவை மகுடம் பெற்ற கதை தெரியுமா?

சதுரங்க விளையாட்டின் ராஜா சிலுவை மகுடம் பெற்ற கதை தெரியுமா?

சதுரங்க விளையாட்டின் ராஜா சிலுவை மகுடம் பெற்ற கதை தெரியுமா?

சதுரங்க விளையாட்டின் ராஜா சிலுவை மகுடம் பெற்ற கதை தெரியுமா?

Chess : சதுரங்க விளையாட்டைப் பொறுத்தவரை, மற்ற விளையாட்டுகளைப் போல இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப தோற்றமும், விதிகளும் தொடர்ந்து மாறி வந்திருக்கின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி சென்னை அருகே உள்ளமகாபலிபுரத்தில் கோலாகலமாகத் தொடங்கி, நேற்று நிறைவடைந்துள்ளது. பல்வேறு சாதனைகளுடன் இந்திய அணி தரவரிசைப்பட்டியலில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நடந்த வேளையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், சதுரங்கக் காய்களில் ராஜாவின் தலையில் சிலுவைக் குறி இருப்பதை மாற்ற வேண்டுமெனக் கூறியிருந்தார்.  அர்ஜூன் சம்பத் கருத்து இணையத்தில் பேசுப்பொருளானது. சரி இந்த செஸ் போர்டு எப்படி வந்தது. சதுரங்க காய்களில் உள்ள ராஜாவின் தலையில் சிலுவை குறி வந்தது எப்படி எனத் தெரியுமா.

தோற்றமும் பரவலும்...

சதுரங்க ஆட்டம் இந்தியாவில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. இங்கிருந்து அரேபிய நாடுகளுக்கும் தெற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் அங்கிருந்து மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. சதுரங்க விளையாட்டைப் பொறுத்தவரை, மற்ற விளையாட்டுகளைப் போல இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்ப தோற்றமும், விதிகளும் தொடர்ந்து மாறி வந்திருக்கின்றன.

இந்தியாவில் துவக்கத்தில் இந்த ஆட்டம் விளையாடப்பட்டபோது, காய்களுக்கு மிருகங்கள், மனிதர்களின் உருவங்கள் இருந்தன எனக் கூறப்படுகிறது. ஆனால், அரேபிய நாடுகளில் இந்த ஆட்டம் பரவியபோது, அவை சிலைகளைப்போல அரூப வடிவத்திற்கு மாற்றப்பட்டன. ஆனால், ஐரோப்பாவில் இந்தக் காய்களுக்கு மீண்டும் மனிதர்களின் உருவம் அளிக்கப்பட்டது.

75ஆவது சுதந்திர தினத்திற்கான தில்லியின் காவல் ஏற்பாடுகள்..

12ஆம் நூற்றாண்டில், சதுரங்கத்தின் எல்லாக் காய்களுக்கும் மனிதர்களின் உருவம் கொடுக்கப்பட்டது. 13ஆம் நூற்றாண்டு வாக்கில், ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதிகளில், சதுரங்கக் காய்களின் வீரர்களுக்கு knight எனப்படும் போர் வீரர்களின் உருவம் அளிக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டு வாக்கில் சதுரங்க ஆட்டமும் அவற்றுக்கான விதிகளும் உலகம் முழுவதும் நிலைபடுத்தப்பட்டன. ஆனால் காய்கள் இடத்திற்கு ஏற்ப மாறுபட்டன. இந்த நிலையில்தான், உலகம் முழுவதும் சதுரங்க ஆட்டதை விளையாடக்கூடிய வீரர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலான காய்களை லண்டனைச் சேர்ந்த 'ஜான் ஜாக் ஆஃப் லண்டன்' என்ற விளையாட்டு பொருட்களை தயாரித்து விற்கும் நிறுவனம் வெளியிட்டது. 1849ல் வெளியிடப்பட்ட இந்த காய்களுக்கு 'ஸ்டாண்டன் சதுரங்கம் எனப் பெயரிடப்பட்டது. ர் நதேனியர் கூக் என்பவர் இதற்கான காய்களை உருவாக்கினார்.

சூரியன் அஸ்தமனத்திற்கு பின் தடை, தந்திரியின் சாபத்தால் உருவான அமானுஷ்யம் - மர்மங்கள் நிறைந்த பங்கர் கோட்டை

ஹோவர்ட் ஸ்டாண்டன் (1810 - 1874). இங்கிலாந்தைச் சேர்ந்தவர். 1843லிருந்து 1851வரை மிக வலுவான சதுரங்க ஆட்டக்காரராக இருந்தவர்.  இதன் காரணமாக அவருடைய பெயர் அந்த புதிய வடிவமைப்பிற்குச் சூட்டப்பட்டது.

இந்த புதிய வடிவமைப்பில்தான் ராஜாவைக் குறிக்க ஐரோப்பிய மன்னர்களின் க்ரீடமும் அந்தக் க்ரீடத்தில் காணப்படும் சிலுவையும் பிரதிபலிப்பாக பொறிக்கப்பட்டது. இந்த வடிவமைப்பிற்கான காப்புரிமை அந்த ஆண்டிலேயே இங்கிலாந்தில் பதிவுசெய்யப்பட்டது.

இந்த வடிவமைப்பில் காய்கள் எளிதில் அடையாளம் காணும்வகையில் இருப்பதால், இதைப் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) தரநிலைப்படுத்தப்பட்ட காய்களாக அங்கீகரித்தது.ஐரோப்பிய மன்னர் மகுடத்தை பிரதிபலித்து உருவாக்கப்பட்டதால் அது சிலுவையுடனே நிலைத்துவிட்டது
Published by:Ilakkiya GP
First published:

Tags: Chess, Chess Olympiad 2022

அடுத்த செய்தி