ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஷிகர் தவானை அணியில் எடுக்கமாட்டேன்! முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்

ஷிகர் தவானை அணியில் எடுக்கமாட்டேன்! முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

டி-20 உலகக் கோப்பை போட்டிக்கு ஷிகர் தவானை எடுக்க மாட்டேன் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், காயம் காரணமாக இரண்டு மாதத்துக்கு மேலாக ஓய்வில் இருந்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை. தற்போது இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் ஷிகர் தவான் இடம் பெற்றுள்ளார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இலங்கைத் தொடரில் சிறப்பாக விளையாடுவதைப் பொறுத்து டி-20 உலகக் கோப்பைத் தொடரில் லோகேஷ் ராகுல், ஷிகர் தவான் இரண்டில் ஒருவருக்குத்தான் இடம் கிடைக்கும் என்று பேசப்படுகிறது.

இந்தநிலையில், இலங்கைக்கு எதிரான போட்டியில் ரன்குவிப்பதை மட்டும் கணக்கில் கொள்ள முடியாது. நான் தேர்வுக்குழுவின் தலைவராக இருந்தால் டி-20 அணிக்கு தவானை எடுக்க மாட்டேன். ராகுலைத் தான் எடுப்பேன். ராகுலுக்கு தவானுக்கு இடையில் எந்தப் போட்டியும் இல்லை. ராகுல் தான் வெற்றியாளர்’என்று தெரிவித்துள்ளார்.

Also see:

 

First published: