• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோழைத்தனத்துக்கு சரியான பதிலடி: இந்திய விமானப்படைக்கு விளையாட்டு வீரர்கள் பாராட்டு!

கோழைத்தனத்துக்கு சரியான பதிலடி: இந்திய விமானப்படைக்கு விளையாட்டு வீரர்கள் பாராட்டு!

புல்வாமா தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு விளையாட்டு வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

புல்வாமா தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு விளையாட்டு வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Sports Stars Salute #IndianAirForce After Strike On Terror Camp | 12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு வீசப்பட்டு தீவிரவாதிகள் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. #IndiaStrikesBack

  • News18
  • Last Updated :
  • Share this:
    புல்வாமா தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு விளையாட்டு வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக, இன்று (26.02.19) அதிகாலை 3.30 மணி அளவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பால்கோட், சகோதி, முஸாபராபாத் ஆகிய பகுதிகளில் நுழைந்த இந்திய விமானப்படை விமானம் அதிரடி தாக்குதலை நடத்தியது.

    12 மிராஜ் ரக விமானங்கள் மூலம் 1000 கிலோ வெடிகுண்டு வீசப்பட்டு தீவிரவாதிகள் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், சுமார் 300 தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தின் கட்டுப்பாட்டு அறையும் தகர்க்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கு மிராஜ் 2000 என்ற போர் விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளது.


    தக்க பதிலடி கொடுத்த இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், இந்திய விளையாட்டு வீரர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில், “நம்ம நல்ல குணத்தை ஒருபோதும் நம் பலவீனமாக தவறாகக் கருதக்கூடாது. ஐ.ஏ.எப்.,க்கு எனது சல்யூட், ஜெய்ஹிந்த்” என கூறியுள்ளார்.



    “பயங்கரவாதத்திற்கு எதிராக மிகவும் தேவையான செய்தியை இந்திய விமானப்படை அனுப்பியுள்ளது, உங்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்” என ரகானே தெரிவித்துள்ளார்.



    “கோழைத்தனத்திற்கு பொருத்தமான பதில்!” என கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் கூறியுள்ளார்.



    அதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளிட்ட பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.







    VIDEO: ரோகித் சர்மாவை அலட்சியம் செய்த பும்ரா, கோலி?

    Also Watch...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: