தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதித்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு மற்றும் பொதுத்துறை
நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில் சிறந்த
பங்களிப்பை அளித்த வீரர், வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பில்
உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என கடந்த ஆண்டு சுதந்திர தின
உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பரிந்துரை அளிக்க 24 பேர் கொண்ட உயர்மட்டக்குழு
உருவாக்கப்பட்டது.
இந்நிலையில், தகுதி வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த உள் ஒதுக்கீடு மூலம் அரசுப் பணியில் சேரும் விளையாட்டு
வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஏராளமான விளையாட்டு வீரர்கள் பயனடைய உள்ளனர்.
VIDEO: தோனியைப் பார்த்துக் கதறி அழுத குழந்தை..!
Also Watch...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.