ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஆசிய போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரருக்கு 10 லட்சம் பரிசு

ஆசிய போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரருக்கு 10 லட்சம் பரிசு

தமிழக வீரர் லக்ஷ்மணன்

தமிழக வீரர் லக்ஷ்மணன்

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று பின்பு தகுதி நீக்கம் செய்யப்பட்ட தமிழக வீரர் லக்ஷ்மணனுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கியுள்ளது.

  புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் கோவிந்தன் லக்ஷ்மணன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டார். அந்தப் பந்தயத்தில் லக்ஷ்மணன் 3-வதாக வந்ததால் வெண்கலப்பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்திலேயே ஓடும் பாதையில் இருந்து மாறி ஓடியதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு அடுத்தபடியாக 4-வதாக வந்த சீன வீரருக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.

  இந்நிலையில் நேற்று டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை  சார்பில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டன. அப்போது சிறிய தவறால் நூலிழையில் பதக்கத்தை தவறவிட்ட லக்ஷ்மணனுக்கும் 10 லட்சம் பரிசுக்கான காசோலையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வழங்கினார்.

  இது தொடர்பாக ரத்தோர் வெளிட்டுள்ள ட்விட்டர் பதிவில் லக்ஷ்மணன் பதக்கம் வெல்லும் வகையில் திறமையை வெளிப்படுத்தியதாகவும், சிறிய தவறால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறியுள்ளார். இப்போதும் அவர் நம்முடைய சாம்பியன்தான் என்றும், நாங்கள் எங்கள் சாம்பியனுடன் எப்போதும் துணை நிற்போம் என்றும் ரத்தோர் குறிப்பிட்டுள்ளார். தன்னை ஊக்கப்படுத்தும் வகையில் பாராட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவி்ப்பதாக லக்ஷ்மணன் கூறியுள்ளார்.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Asian Games 2018