Home » News » Sports » SPORTS GROUNDS REOPEN AFTER 5 MONTHS VJR

விளையாட்டு மைதானங்களில் வீரர்கள் அச்சமின்றி பயிற்சி மேற்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஐந்து மாத காலம் விளையாட்டு உலகம் முடங்கிக்கிடந்தது. வீரர்கள் கால் தடமின்றி மைதானங்கள் ஏங்கிக்கிடந்தன.

விளையாட்டு மைதானங்களில் வீரர்கள் அச்சமின்றி பயிற்சி மேற்கொள்ள அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்னென்ன?
  • News18 Tamil
  • Last Updated: September 11, 2020, 7:17 PM IST
  • Share this:
கொரோனா ஊரடங்கு தளர்வால் 5 மாதத்திற்கு பின்னர் மைதானங்கள் திறக்கப்பட்டு விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உலக நாடுகளால் கொரோனோ வைரஸ் கட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து விளையாட்டு உலகம் மூச்சுவிடத் தொடங்கியுள்ளது.  மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு தளர்வுகளால் தற்பொழுது வழிகாட்டு நெறிமுறைகளுடம் விளையாட்டு மைதானங்கள் திறக்கப்பட்டு வீரர்கள் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தினமும் ஆறாயிரத்தை நெருங்கும் கொரோனோ வைரஸ் பரவலால் மைதானத்திற்கு வரும் வீரர்கள் அனைவருக்கும் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டு,  பயிற்சி தொடங்கும் வரை முகக்கவசம் கட்டாயம் அணிய உத்தரவிடப்பட்டுள்ளது. கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகு மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். தனிமனித இடைவெளியுடன் லட்சிய பயணத்திற்கு வீரர்கள் தயாராகி வருகின்றனர்.


கொரோனோ கால ஊரடங்கு வீரர்களின் கட்டுப்பாடுகள், அவர்கள் வடிவமைத்து வைந்திருந்த திறமைகளை புரட்டிப் போட்டுள்ளது. ஆறுமாத கால முடக்கம் அவர்களுக்கும் பதக்கத்திற்கும் உடனான இடைவெளியை நீட்டித்துள்ளது. இழந்த உத்வேகத்தை மீட்டெடுக்க 6 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



கொரோனோ ஊரடங்கிற்கு பிறகு அச்சமின்றி மைதானத்தில் பயிற்சியை தொடங்கியது மகிழ்ச்சி அளிப்பதாக வீரர்கள் பெருமூச்சுவிடுகின்றனர். கொரோனாவால் பொருளாதாரத்தை இழந்து வாடும் மக்களும், திறமையை இழந்து தவிக்கும் வீரர்களும் ஒன்றுதான். இந்தியாவின் வளர்ச்சியை மீட்டெடுக்க பாடுபடுபது போல் வீரர்களின் திறமையையும் மீட்டெடுத்தால் தான் அடுத்த வருட ஒலிம்பிக்கில் இந்தியாவின் கொடி உயரே பறக்கும்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading