இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாற்றம்!

Sports Authority of India renamed #SportsIndia | 1961-ம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.

news18
Updated: February 12, 2019, 5:22 PM IST
இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெயர் மாற்றம்!
இந்திய விளையாட்டு ஆணையம்.
news18
Updated: February 12, 2019, 5:22 PM IST
இந்திய விளையாடு ஆணையத்தின் பெயரை மாற்ற மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

1961-ம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையம் என்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த ஆணையத்தால் அமைப்பட்ட குழு தலைமையில் 1982-ம் ஆண்டு டெல்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

அதன்பின், 1984-ம் ஆண்டு மத்திய அரசின் மேற்பார்வையில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் இந்த ஆணையத்தை விரிவாக்கம் செய்தது.

‘Sports Authority of India’ (SAI) என்ற அழைக்கப்பட்ட இந்திய விளையாடு ஆணையத்தின்கீழ் நாடு முழுவதும் ஏராளாமன விளையாட்டுக் கல்விக்கூடங்களும், பயிற்சி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. அனைத்து மாநில விளையாட்டு சங்கங்களும், இந்த அமைப்பின்கீழ் செயல்படுகிறது.

இந்நிலையில், இந்திய விளையாடு ஆணையத்தின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் தலைமையில் நடைபெற்றது.

இதில், இந்திய விளையாடு ஆணையத்தின் உறுப்பினர்கள், விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில், இந்திய விளையாடு ஆணையத்தின் பெயரை ‘Sports India’ என்று மாற்றுவதாக முடிவு செய்துள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video: ‘பேபி சிட்டர்’ விளம்பரத்தால் கோபமடைந்த மேத்யூ ஹெய்டன்!

Also Watch..

First published: February 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...