குளிர்கால ஒலிம்பிக் போட்டி - தங்கம் வென்ற தென்கொரியா

news18
Updated: February 11, 2018, 7:41 AM IST
குளிர்கால ஒலிம்பிக் போட்டி - தங்கம் வென்ற தென்கொரியா
news18
Updated: February 11, 2018, 7:41 AM IST
குளிர்கால ஒலிம்பிக் போட்டியின், 1,500 மீட்டர் ஷார்ட் ட்ராக் பிரிவில் தென் கொரியா தங்கப்பதக்கம் வென்றது.

தென் கொரியாவின் பியாங்சங் நகரில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், தென் கொரியா மற்றும் வடகொரியா நாடுகள் ஒரே அணியாக பங்கேற்றுள்ளன.

இதில் சனிக்கிழமை நடைபெற்ற 1500 மீட்டர் ஷார்ட் ட்ராக் பிரிவில் தென் கொரியா வீரர் லிம் க்யோ ஜுன், 2 நிமிடம் 10 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இதேபோல மகளிருக்கான பையத்லான் 7.5 கிலோ மீட்டர் போட்டியில், ஜெர்மனி வீராங்கனை லாரா, குறிக்கப்பட்ட தூரத்தை 21 நிமிடம் 6 வினாடிகளில் கடந்து பதக்கத்தை தட்டிச் சென்றார்.

பெண்களுக்கான 15 கிலோ மீட்டர் ஸ்கையத்லான் போட்டியில் ஸ்வீடன் வீராங்கனை சார்லோட் காலா தங்கப்பதக்கம் வென்றார்.

இதுகுளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அவர் வென்ற 3-வது தங்கப்பதக்கமாகும்.
First published: February 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்