Home /News /sports /

ஆகாஷ் சோப்ரா சொன்னது போல் இந்தியா 174 ரன்களுக்குச் சுருண்டது -தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 305 ரன்கள்

ஆகாஷ் சோப்ரா சொன்னது போல் இந்தியா 174 ரன்களுக்குச் சுருண்டது -தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 305 ரன்கள்

செஞ்சூரியன் மைதானத்தின் பிட்ச் பேட்டிங்குக்கு மிக மிகக் கடினமாகி விட்டது, இதில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • 2 minute read
  • Last Updated :
செஞ்சூரியன் மைதானத்தின் பிட்ச் பேட்டிங்குக்கு மிக மிகக் கடினமாகி விட்டது, இதில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியில் இடது கை ஒல்லி-உயர மார்க்கோ யான்சென் 4 விக்கெட்டுகளையும் ரபாடா 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பிட்ச் வெயில் அடித்ததில் நன்றாகக் காய்ந்து கடினமான லெந்திலிருந்து எகிறுகிறது, குட்லெந்திலிருந்து எகிறுகிறது, ஸ்ட்ரோக் ஆடுவது கடினம் ஒரு சில பந்துகள் தாழ்வாகவும் வருகின்றன, ரன்கள் எடுப்பது மிகமிகக் கடினமான இந்தப் பிட்சில் தென் ஆப்பிரிக்காவுக்கு 305 ரன்கள் இலக்கு இமாலய இலக்குதான். தென் ஆப்பிரிக்கா இந்த இந்தியப் பந்து வீச்சை எதிர்த்து மீண்டு வருவது மிகமிகக் கடினம். பிட்ச் நிச்சயமின்மையின் உச்சத்தில் இருக்கிறது.

நல்லவேளையாக கோலி டாஸ் வென்றார், வென்றதோடு பேட்டிங்கையும் எடுத்தார், 4வது இன்னிங்ஸ் பேட்டிங் மிகமிகக் கடினம், ஆனால் இதைக்கூறிடும்போது இந்திய பேட்ஸ்மென்களில் மூவர் கூட்டணியான புஜாரா, கோலி, ரகானே அனாவசியமாகவே ஆட்டமிழந்தனர்.

இன்று 16/1 என்று தொடங்கியது இந்திய அணி உணவு இடைவேளையின் போது ராகுல் (23), தாக்கூர் (10) விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை எடுத்திருந்தது, உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளைக்கு இடையே மேலும்95 ரன்கள் சேர்த்து 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது.

உணவு இடைவேளைக்குப் பிறகு விராட் கோலி 18 ரன்கள் எடுத்து ஆட்டம் தொடங்கியவுடனேயே இடது கை வேகப்பந்து வீச்சாளர் மார்க்கோ யான்சென் மிகவும் வெளியே வீசிய பந்தை ட்ரைவ் ஆடுகிறேன் என்று எட்ஜ் செய்தார் அது டி காக் கையில் தஞ்சமடைந்தது. புஜாரா இதை விடவும் கொடுமை, 16 ரன்களில் லுங்கி இங்கிடி வீசிய லெக் சைடு ஆஃப் வாலி பந்து., பவுண்டரி பந்து அது, அதைப்போய் மொன்னையாக ஆடி எட்ஜ் செய்து லெக் திசையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார், கோலி, இவர் ஆனாவசிய அவுட்.

ரகானே இறங்கினார், இந்தப் பிட்சில் ஆக்ரோஷமாக ஆடி ரன்களைத் தேற்ற வேண்டியதுதான் என்று ஆடினார். 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் அவர் 23 பந்தில் 20 ரன்கள் எடுத்த நிலையில் மார்க்கோ யான்சென் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தை தூக்கி அடித்திருக்கலாம், அல்லது ஆஃப் திசையில் அடித்திருக்கலாம் அல்லது ஆடாமல் விட்டிருக்கலாம் ஆனால் கட்டுப்படுத்துகிறேன் பேர்வழி என்று புல் ஷாட்டை நேராக ஸ்கொயர் லெக் பீல்டர் கையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ரிஷப் பந்த் 34 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆக்ரோஷமாக ஆடினார், ஒரு ஸ்கொயர் கட், மற்றும் ஒரு கோபமான புல்ஷாட் பவுண்டரிகளுடன் முல்டரை இறங்கி வந்து கவர் திசையில் பளார் பவுண்டரி அடித்ததும் அவர் மூடைக் காட்டியது, ஆனால் ரபாடாவைப் போய் டவுன் த டிராக் ஆட முயன்றார், பந்து எழும்பியது தை ஏதோ மடக்கி அடிக்கப் பார்த்தார் அது மிட் ஆனில் எளிதான கேட்ச் ஆனது. அஸ்வின் (14), ஷமி (1), ரபாடாவிடம் காலியாகினர். பும்ரா 7 நாட் அவுட், சிராஜ் யான்சென் பந்தில் ஒதுங்கி ஆடப்போய் ஸ்டம்புகளை இழந்தார்.

பிட்ச் எப்படி இருக்கிறது என்பதற்கு தென் ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் விட்ட 17 பை ரன்களே சாட்சி. மொத்தம் உதிரி ரன்கள் 27 என்று இந்தியாவுக்குக் கைகொடுக்க 50.3 ஓவர்களில் இந்தியா 174 ரன்களுக்கு மடங்கியது, தென் ஆப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்கு 305 ரன்கள். இன்று இன்னும் குறைந்தது 50 ஓவர்கள் மீதமுள்ளன
First published:

அடுத்த செய்தி