பிசிசிஐ புதிய தலைவராக கங்குலி தேர்வாக வாய்ப்பு

பிசிசிஐ புதிய தலைவராக கங்குலி தேர்வாக வாய்ப்பு
சவுரவ் கங்குலி. (Image: Getty)
  • Share this:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வாகுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு வருகின்ற 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், புதிய நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட விரும்புவோருக்கான மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தலைவர் பதவிக்கு முன்னாள் வீரர்களான கங்குலி மற்றும் பிரிஜேஷ் படேல் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில், பிசிசிஐ நிர்வாகிகளின் கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. அப்போது, பிசிசிஐ புதிய தலைவராக கங்குலி விருப்பம் தெரிவித்ததற்கு, பெரும்பான்மையான நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.


அதேவேளையில், பிரிஜேஸ் படேல் ஐபிஎல் தலைவராவதற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்பதால், இந்த பந்தயத்தில் இருந்து அவர் பின் வாங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, கங்குலி புதிய தலைவராக போட்டியின்றி தேர்வாக அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் மகன் ஜெய் ஷா பிசிசிஐ செயலாளராகவும், மத்திய இணையமைச்சர் அனுராக் தாகூரின் சகோதரர் அருண் துமால் பொருளாளராகவும் தேர்வாகவுள்ளனர்.

இந்த பதவிக்கு யாரும் போட்டியாக மனு அளிக்காததால், இவர்கள் ஏகமனதாக தேர்வானதாக இன்று அறிவிக்கப்படலாம். மேலும், கிரிக்கெட் வீரர்களுக்கான சங்க தலைவராக அன்ஷுமன் கெய்க்வாட் வெற்றிபெற்றுள்ளார்.

Loading...

First published: October 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...