2011 -ம் ஆண்டு இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற தருணத்தை ரசிகர்கள் இன்று நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தவிர்க்க முடியாத பெயர் மகேந்திர சிங் தோனி. 1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதன்முறையாக உலகக்கோப்பையை கையில் ஏந்தியது. அதன்பிறகு, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி தோனி தலைமையிலான இந்திய அணி சுமார் 28ஆண்டுகளுக்கு பிறகு உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது. இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டியில் தோனியின் ஃபினிஷிங் சிக்சர் இன்றும் கண் முன் வந்து போகும்.
”இந்தியா லிஃப்ட் தி வேர்ல்டு கப், ஆஃப்டர் 28 இயர்ஸ்” இந்த ஒற்றை வரிதான் இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்நிலையில், 2011 ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியா உலகக்கோப்பையை வென்றதை நினைவுகூர்ந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
கொரோனா அச்சம் ஒருபுறம் இருந்தாலும், தோனியின் தலைமையில் இந்தியா கோப்பையை வென்றதை, அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி தீர்க்கின்றனர்.
மீம்ஸ்கள் மூலமாகவும், டிக்டாக் வீடியோக்கள் மூலமாகவும் ரசிகர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை தாறுமாறாக பதிவிட்டு வருகின்றனர்.
9ஆண்டு கால இந்த சாதனையை கொண்டாடும் அதே சமயம், ரசிகர்கள் சற்று வருத்தமும் அடைந்துள்ளனர். ஐபிஎல் தொடர் மூலம் தோனியை மீண்டும் களத்தில் காண காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த கொரோனாவால், தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையும் கேள்விக்குறியாகியுள்ளதாக ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
Also see...
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.