Home /News /sports /

மீண்டும் நிறவெறி... களத்தை விட்டு கனத்த இதயத்தோடு வெளியேறிய கால்பந்தாட்ட வீரர் - வீடியோ

மீண்டும் நிறவெறி... களத்தை விட்டு கனத்த இதயத்தோடு வெளியேறிய கால்பந்தாட்ட வீரர் - வீடியோ

மவுசா மரேகா

மவுசா மரேகா

சாம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்ட தொடரின் லீக் சுற்று போட்டியின் போது ரசிகர்களின் நிறவெறி தாக்குதலுக்குள்ளான மவுசா மரேகா என்ற போர்ச்சுகல் வீரர் களத்தை விட்டு வெளியேறினார்.

கால்பந்தாட்டத்தில் நிறவெறித் தாக்குதல் என்பது சிறிது காலம் தணிந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கியுள்ளது. மவுசா மரேகா என்ற கால்பந்தாட்ட வீரர் தற்போது இந்த இனவெறிக்கு இரையாகியுள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரின் லீக் சுற்று போட்டி ஒன்று போர்டோ மற்றும் விட்டோரியா அணிகளுக்கு இடையே நடந்துகொண்டிருந்தது. போட்டியின் தொடக்கம் முதலே ரசிகர்கள் போர்ட்டோ அணியின் முன்கள வீரரான மவுசா மரேகாவை நிறவெறியைத் தூண்டும் வகையில் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது.

மவுசா மரேகா


ஒரு கட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து ஆட்டத்தில் சமநிலையில் இருக்க வெற்றியைத் தீர்மானிக்கும் இரண்டாவது கோலை போர்ட்டோ அணிக்காக மவுசா மரேகா 60-வது நிமிடத்தில் அடித்தார். தொடர்ந்த கொண்டாட்டத்தின் போது, தன்னை இழிவுபடுத்திய ரசிகர்களை நோக்கி தன் தோல் நிறத்தை மரேகா சுட்டிகாட்டியதாக தெரிகிறது.

இதைக் கண்டித்து அவருக்கு மஞ்சள் அட்டையை காண்பிக்க மற்றொரு பக்கம் மவுசா மரேகாவின் செயலால் மேலும் கோபமடைந்த ரசிகர்கள் அவருக்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பியதோடல்லாமல், மைதானத்தில் இருந்த இருக்கைகளையும் எடுத்து களத்தில் வீசினர்.


இதுபோன்ற சம்பவங்களால் விரக்தியடைந்த மவுசா களத்தைவிட்டு வெளியேறினார். சகவீரர்களும் பயிற்சியாளாரும் அவரை சமாதானம் செய்ய முயன்ற போதும் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.

இதனால் களத்தில் நீண்ட நேரம் பரபரப்பு தொற்றிக்கொண்டாலும், அவருக்கு பதிலாக மற்றொரு மாற்று வீரர் களமிறங்கியதும் ஆட்டம் தொடங்கியது. முடிவில் போர்ட்டோ அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இருப்பினும் இது ஒரு மறக்கப்பட வேண்டிய கசப்பான சம்பவம். இது கால்பாந்தட்டத்துக்கு நல்லதல்ல என ரசிகர்களும், முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான்கள் பலரும் தங்கள் ஆதரவை மவுசா மரேகாவுக்கு சமூக வலைதளத்தில் தெரிவித்துவருகின்றனர்.

Also see:


 
Published by:Karthick S
First published:

Tags: Racism

அடுத்த செய்தி