முகப்பு /செய்தி /விளையாட்டு / #SingaporeOpen: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்!

#SingaporeOpen: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேற்றம்!

பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால். (Getty Images)

பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால். (Getty Images)

#SingaporeOpen: #Sindhu, #Saina and #Srikanth seal quarter-final spots | தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி சிந்து, 21-13, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் நேர்செட்டில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேற்றியுள்ளனர்.

சிங்கப்பூரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் கடந்த 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட் உடன் மோதினார்.

தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்தி சிந்து, 21-13, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் நேர்செட்டில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

PV-SIndhu
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து (Getty)

மற்றொரு போட்டியில், சாய்னா நேவால், தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி சச்சுவாவை எதிர்கொண்டார். இதில், 21-16, 18-21, 21-19 என்று புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்ற அவர் காலிறுதிக்குள் நுழைந்தார்.

Saina Nehwal, சாய்னா நேவால்
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். (Twitter)

அதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், டென்மார்க்கின் ஹான்ஸ்-கிறிஸ்டியன் உடன் மோதினார். அதில், 21-12, 23-21 என்ற புள்ளிகள் கணக்கில் நேர் செட்டில் வெற்றி பெற்று ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறினார்.

ரோகித் சர்மா எப்போது வருவார்... பொல்லார்டு தகவல்!

டி-20 போட்டியில் கெய்லை துரத்தும் பொல்லார்டு!

VIDEO: ஹர்திக், பொல்லார்டு உடன் மோதிய பஞ்சாப் வீரர்!

முக்கியமான சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா!

ஐ.பி.எல் லீக் போட்டியில் கடைசிப் பந்தில் மும்பை அணி த்ரில் வெற்றி

Also Watch...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Badminton, PV Sindhu, Saina Nehwal