முகப்பு /செய்தி /விளையாட்டு / #SingaporeOpen | பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!

#SingaporeOpen | பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. (File)

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. (File)

#SingaporeOpen: #PVSindhu edges past #CaiYanyan to set up semi final | அரையிறுதியில் பி.வி.சிந்து, நஸோமி ஒகுஹரா உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

சிங்கப்பூரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் கடந்த 4-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவைச் சேர்ந்த கய் யான்யான் உடன் மோதினார்.

முதல் செட்டில் சிறப்பாக விளையாடிய சிந்து, அந்த செட்டை 21-13 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினார். ஆனால், 2-வது செட்டை 17-21 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் இழந்தார்.

PV Sindhu, பி.வி.சிந்து
அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து. (Getty)

பின்னர் சுதாரித்துக்கொண்ட சிந்து, வெற்றித்தை தீர்மானிக்கும் 3-வது செட்டில் ஆக்ரோசமாக விளையாடினார். அந்த செட்டை 21-14 என்ற புள்ளிகள் கணக்கில் அவர் தனதாக்கினார். இதன்மூலம், 2-1 என்ற செட் கணக்கில் போராடி வெற்றிபெற்ற சிந்து, அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில், இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பானின் நஸோமி ஒகுஹரா உடன் மோதினார். தொடக்கம் முதலே தடுமாறிய சாய்னா, 8-21, 13-21 என்ற புள்ளிகள் கணக்கில் நேர்செட்டில் தோல்வி அடைந்தார்.

Saina Nehwal, சாய்னா நேவால்
சாய்னா நேவால் தோல்வி. (Twitter)

VIDEO | நம்ப முடியாத வெற்றி... நகம் கடிக்க வைத்த கடைசி ஓவர் வீடியோ..!

VIDEO | நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ? தோனியை தாக்கிய மோசமான பவுன்சர்!

ஐ.பி.எல் வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்... உளவு அமைப்புகள் எச்சரிக்கை...!

VIDEO | அம்பயருடன் வாக்குவாதம்... தோனிக்கு அபராதம்.. ரசிகர்கள் கோபம்..!

தோனி, அம்பதி ராயுடு அதிரடி! கடைசி ஓவரில் சென்னை அணி த்ரில் வெற்றி..

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


First published:

Tags: Badminton, PV Sindhu, Saina Nehwal