ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து!

உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் பி.வி.சிந்து!

பி.வி.சிந்து

பி.வி.சிந்து

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி முதன்முறையாக உலக பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

  சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்ற உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில், முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் கண்டனர்.

  இதன், மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில், தரநிலையில் ஐந்தாவது இடம் வகிக்கும் இந்தியாவின் பி.வி.சிந்து, 4-வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யுஃபேவுடன் (Chen Yufei) மோதினார்.

  அந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-க்கு -7, 21 க்கு14 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒக்குஹாராவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அசத்தினார்.

  இதன்மூலம் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து. கடந்த இரண்டுமுறையாக இறுதிப் போட்டியில் நுழைந்த பி.வி.சிந்து அந்தச் சுற்றில் தோல்வியடைந்திருந்தார்.

  Also see:

  Published by:Karthick S
  First published:

  Tags: P.V.Sindhu